விக்ரம் படத்தின் இசை வெளியீட்டு விழா நேரு உள்விளையாட்டு அரங்கில் இன்று மாலை 6 மணிக்கு தொடங்கி நடைபெற்று வருகிறது. இதற்கான புகைப்படங்கள் இணையத்தில் வெளியாகி வைரலாகி வருகிறது. 


இந்தநிகழ்ச்சியில் ட்ரெயிலர் விழாவில், விஜய் சேதுபதி, உதயநிதி, சிலம்பரசன், அனிருத், இயக்குநர் பா. ரஞ்சித், மகேந்திரன், ரோபா ஷங்கர், நரேன் உள்ளிட்ட பல நட்சத்திரங்கள் கலந்துகொண்டனர். நிகழ்ச்சியில் கலந்துகொண்டு பேசிய இயக்குநர் பா. ரஞ்சித், கமல் நடித்த விருமாண்டி திரைப்படம் எனக்கு மிகவும் பிடிக்கும். விருமாண்டி திரைப்படத்திற்கு பிறகு மதுரையில் கோர்ட் சூட் போட்ட கமலை இயக்க ஆசை. மதுரையில் கமலை வைத்து சம்பவம் செய்ய வேண்டும் என்று தெரிவித்தார். 






இதையடுத்து, விரைவில் பா. ரஞ்சித் இயக்கும் அடுத்த படத்தில் உலக நாயகன் கமல்ஹாசன் குறித்த அடுத்தடுத்த அப்டேட் வெளியாகலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது. 


முன்னதாக, கமல்ஹாசன் நடித்துள்ள விக்ரம் படம் வரும் ஜூன் 3-ஆம் தேதி வெளியாக உள்ளது. லோகேஷ் கனகராஜ் இயக்கியுள்ள இந்த படத்திற்கு அனிருத் இசையமைத்துள்ளார். சமீபத்தில் இந்த படத்தின் ”பத்தல பத்தல” பாடல் வெளியாகி யூ-ட்யூப்பில் ட்ரெண்டாகி வருகிறது. விக்ரம் படத்தில் கமல்ஹாசனுடன் இணைந்து விஜய் சேதுபதி, ஃபஹத் பாசில் நடித்துள்ளனர். பழைய விக்ரம் படத்தில் கமல்ஹாசன் போலீஸ் அதிகாரியாக நடித்திருந்தார். இந்த படத்திலும் கமல்ஹாசன் போலீஸ் அதிகாரியாக நடித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. 


மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்


ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்


பேஸ்புக் பக்கத்தில் தொடர


ட்விட்டர் பக்கத்தில் தொடர


யூட்யூபில் வீடியோக்களை காண