சீயான் 62 

நடிகர் சீயான் விக்ரம் நடிக்கும் 62ஆவது படத்தின் அப்டேட் வெளியாகி இருக்கிறது (Chiyaan 62 Update). பண்ணையாரும் பத்மினியும், சித்தா உள்ளிட்ட படங்களை இயக்கி கவனமீர்த்த இயக்குநர் சு.அருண்குமார் இந்தப் படத்தை இயக்குகிறார். ஜி.வி.பிரகாஷ் குமார் இந்தப் படத்துக்கு இசையமைக்கிறார். இந்தப் படத்தின் அறிவிப்பு வீடியோ ஒன்றை தற்போது வெளியிட்டுள்ளார் நடிகர் விக்ரம்.

Continues below advertisement

Continues below advertisement

விக்ரமின் 62ஆவது படமான இப்படத்தின் அறிவிப்பு அவரது ரசிகர்களை உற்சாகத்தில் ஆழ்த்தியுள்ளது. மற்றொருபுறம், பா.ரஞ்சித் இயக்கத்தில் விக்ரம் நடித்துள்ள தங்கலான் திரைப்படம் அடுத்த ஆண்டு ஜனவரி 26 வெளியாகும் என படக்குழு நேற்று அக்டோபர் 27ஆம் தேதி தகவல் வெளியிட்டது.

மேலும் தங்கலான் திரைப்படத்தின் டீசர் 2024 ஆம் ஆண்டு ஜனவரி 1 ஆம் தேதி வெளியாக இருக்கிறது. விக்ரம் , மாளவிகா மோகனன், பார்வதி திருவோத்து உள்ளிட்டவர்கள் நடித்துள்ள இந்தப் படத்திற்கு ஜி.வி பிரகாஷ் குமார் இசையமைத்திருக்கிறார்.  ஸ்டுடியோ கிரீன் நிறுவனம் இந்தப் படத்தை தயாரித்துள்ளது. 

துருவ நட்சத்திரம்

கெளதம் மேனன் இயக்கத்தில் விக்ரம் நடித்திருக்கும் துருவ நட்சத்திரம் படம் வருகின்ற நவம்பர் 24 ஆம் தேதி வெளியாக இருக்கிறது. விக்ரம்,ரித்து வர்மா, ஐஸ்வர்யா ராஜேஷ், பார்த்திபன், சிம்ரன் , டி டி நீலகண்டன், ராதிகா சரத்குமார், விநாயகன், டி ஜே உள்ளிட்டவர்கள் இந்தப் படத்தில் நடித்துள்ளார்கள். ஹாரிஸ் ஜெயராஜ் இந்தப் படத்திற்கு இசையமைத்துள்ளார். துருவ நட்சத்திரம் படத்தின் ட்ரெய்லர் சமீபத்தில் வெளியாகி ரசிகர்களிடம் மிகப்பெரிய வரவேற்பைப் பெற்றது.