விஜய் நடித்துள்ள வாரிசு படத்தின் தமிழக வெளியீட்டு உரிமை யாருக்கு சென்றுள்ளது என்பது குறித்தான தகவல் வெளியாகியிருக்கிறது. 


விஜய் நடிப்பில் தெலுங்கு இயக்குனர் வம்சி பைடிபள்ளி இயக்கத்தில் உருவாகி வரும் திரைப்படம்  ‘வாரிசு’. தமிழில் 'வாரிசு' என்ற பெயரிலும் தெலுங்கில் 'வாரசுடு' என்ற பெயரிலும் இந்தத்திரைப்படம் வெளியாக உள்ளது. தமிழ் மற்றும் தெலுங்கு ஆகிய இரண்டு மொழிகளும் வெளிவர இருக்கும் இந்த திரைப்படம் இந்த தீபாவளிக்கு வெளியாகும் என முன்னர் அறிவிக்கப்பட்டு, பின்னர் படப்பிடிப்பு முடியாத காரணத்தால் பொங்கல் ரிலீஸ் என தள்ளி வைக்கப்பட்டது. இது குறித்தான அதிகாரப்பூர்வ அறிவிப்பு தீபாவளி தினமான நேற்று அறிவிக்கப்பட்டது. 


 






முன்னதாக விஜயின் பிறந்தநாளை முன்னிட்டு வெளியான  ‘வாரிசு’ படத்தின் மூன்று போஸ்டர்களும் மக்களின் மத்தியில் மிகப்பெரிய வரவேற்பை பெற்றது. விஜய் ரசிகர்களின் மனதில் ஒருபக்கம் எதிர்ப்பார்ப்பு இருக்க மறுபக்கம், படம் சுமாராக இருக்குமோ என்ற பயமும் இருந்து வருகிறது. கடந்த முறை பீஸ்ட் படத்திற்கு பில்-அப் கொடுத்து காரியத்தை கெடுத்த படக்குழுவினரை, விஜய் ரசிகர்கள் பாரபட்சம் பார்க்காமல், திட்டி தீர்த்தனர். இதனால் வாரிசு படத்தை விஜய் ரசிகரகள் மிகவும் ஆவலுடன் எதிர்பார்த்து காத்துக்கொண்டிருக்கின்றனர். 


இப்படத்தில் நடிகை ராஷ்மிகா மந்தனா ஹீரோயினாக நடித்துள்ளார். அதுமட்டுமல்லாமல் பிரகாஷ்ராஜ், சரத்குமார், பிரபு, ஷாம்,சங்கீதா, ஜெயசுதா, ஸ்ரீகாந்த் உள்ளிட்ட மிகப்பெரிய நட்சத்திர பட்டாளமே இப்படத்தில் இணைந்துள்ளது. படப்பிடிப்பு முடிவடைந்து படத்தின் பின்னணி வேலைகள் நடந்து வரும் நிலையில் தமிழகத்தில் வாரிசு படத்தின் தமிழக வெளியீட்டு உரிமையை பிரபல தயாரிப்பாளர் லலித்குமார் கைப்பற்றி இருக்கிறார். இவர் முன்னதாக மாஸ்டர் படத்தில் இணை தயாரிப்பாளராக பணியாற்றி இருந்தார்.  தீபாவளி பரிசாக  ‘வாரிசு’  படத்தில் இருந்து முதல்பாடல் வெளியாகும் என சொல்லப்பட்ட நிலையில் போஸ்டர் மட்டுமே வெளியானது. அதனால் அடுத்த வாரம் பாடல் குறித்தான அப்டேட் வெளியாகும் என ரசிகர்கள் ஆவலாக காத்துக்கொண்டுள்ளனர்.