இந்நிலையில், இன்று தொடங்கிய மும்பை சந்தை குறியீடான சென்செக்ஸ், 249.58 புள்ளிகள் அதிகரித்து 60, 081 ஆக புள்ளிகளாக உள்ளது. தேசிய பங்குச் சந்தை குறியீடான நிஃப்டி,80.75 புள்ளிகள் அதிகரித்து 17,811.50 புள்ளிகளாக உள்ளது.






லாபம்- நஷ்டம்:


இந்நிலையில் டாடா மோடார்ஸ், பெல், கனரா வங்கி, டெக் மகேந்திரா ஐசிஐசிஐ வங்கி, மாருதி சுசுகி, இன்போசிஸ் உள்ளிட்ட நிறுவனங்கள் ஏற்றம் கண்டன.


நெஸ்ட்லே, பிரிட்டானியா,இந்துஸ் டவர்ஸ், கோடாக் மகேந்திரா, ஆக்சிஸ் வங்கி, ரிலையன்ஸ், ஹெச்யுஎல் உள்ளிட்ட நிறுவனங்களின் பங்குகள் சரிவை சந்தித்தன.


பொருளாதார மந்த நிலை:


ரஷ்யா - உக்ரைன் போர், கொரோனா தொற்று காரணமாக பொருளாதார மந்த நிலை ஏற்பட்டது. அதன் காரணமாக பணவீக்கம் அதிகரித்தது. மேலும் பணவீக்கத்தை கட்டுப்படுத்த அமெரிக்க மத்திய வங்கி, வட்டி விகிதத்தை உயர்த்தியது.


இதன் காரணமாக இந்திய பங்குச் சந்தைகளில் முதலீடு செய்த அந்நிய  முதலீட்டாளர்கள், வெளியே செல்ல ஆரம்பித்தனர். இதனால் டாலருக்கான பற்றாக்குறை அதிகரித்தது. டாலருக்கு தேவை இருந்தும், பற்றாக்குறை காணப்பட்டதால் டாலரின் மதிப்பு உயரத் தொடங்கியது.


இதனால், கச்சா எண்ணெய் உள்ளிட்டவற்றை டாலர்களில் இறக்குமதி செய்யும் இந்தியா உள்ளிட்ட நாடுகளுக்கு பெரும் பாதிப்பு ஏற்பட்டுள்ளது.


உலக முழுவதும் பொருளாதார மந்த நிலை காரணமாக வீழ்ச்சியில் சென்று கொண்டிருந்த பங்குச் சந்தைகள், கடந்த ஒரு வாரமாக ஏற்றத்தில் சென்று கொண்டிருப்பதால், பல்வேறு நிறுவனங்கள் மற்றும் முதலீட்டாளர்கள் சற்று ஆறுதல் அடைந்துள்ளன. இதனால், இந்திய ரூபாய் மதிப்பும் உயராமல் இருக்க கூடும் என எதிர்பார்க்கப்படுகிறது.


ருபாய் மதிப்பு உயர்வு


இந்நிலையில் கடந்த சில மாதங்களாக டாலருக்கு எதிரான இந்திய ரூபாய் உள்ளிட்ட பல்வேறு நாடுகளின் கரன்சிகள் பெரும் வீழ்ச்சியை சந்தித்து வருகின்றனர். அதனை தொடர்ந்து டாலருக்கு எதிரான ரூபாயின் மதிப்பு ரூ.83 ஐ கடந்து சென்றது.


இந்நிலையில், கடந்த ஒரு வாரமாக பங்கு சந்தை சற்று ஏற்றத்துடன் காணப்பட்டு வருகிறது.





இதன் காரணமாக ரூபாயின் மதிப்பு சற்று வலுப்பெற்று வருகிறது. இந்நிலையில் இன்று டாலருக்கு எதிரான இந்திய ரூபாய் மதிப்பு 25 காசுகள் அதிகரித்து 82.63 என்ற அளவில் நிலையில் உள்ளது. 


Also Read: Diwali Muhurat Trading: தீபாவளியொட்டிய முகூர்த்த வர்த்தகம்: ஏற்றத்துடன் தொடங்கியது பங்குச் சந்தை..லாபத்தில் டாட்டா நிறுவனம்