2008-ம் ஆண்டு கோடை விடுமுறையின்போது வெளியானது குருவி திரைப்படம். விஜய், த்ரிஷா, விவேக் நடிப்பில் உருவாகியிருந்த இத்திரைப்படத்தை தோட்டா தரணி இயக்க, உதயநிதி ஸ்டாலினின் ரெட் ஜெயண்ட் நிறுவனம் தயாரித்து இருந்தது. இப்போது நீண்ட இடைவெளிக்கு பிறகு, விஜய் நடிப்பில் உருவாக இருக்கும் படத்தை ரெட் ஜெயண்ட் தயாரிக்க இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.


13 ஆண்டுகளுக்கு முன்பு தயாரிப்பாளராக மாறிய உதயநிதி ஸ்டாலின், ரெட் ஜெயண்ட் மூவிஸ் என்ற பேனரின் கீழ் திரைப்படங்களை தயாரிக்க தொடங்கினார். உதயநிதி ஸ்டாலின் திரைப்படங்களை தயாரிக்க வேண்டும் என ஐடியா சொன்னதே விஜய்தான் என்றும், இதனால்தான் 2008-2009 ஆண்டுகளில் உதயநிதி ஸ்டாலின் தயாரிப்பு நிறுவனத்தை தொடங்கி முதல் படமாக குருவி தயாரிக்கப்பட்டது எனவும் கோலிவுட் வட்டாரத்தில் பேச்சு இருக்கின்றது.



மேலும் படிக்க: Schools Colleges Holiday: தொடரும் மழை: நாளை எங்கெல்லாம் பள்ளி, கல்லூரி விடுமுறை தெரியுமா?


இதனால், முதல் படமாக, குருவி படத்தை தயாரித்து வெளியிட்டது ரெட் ஜெயண்ட் நிறுவனம். அதனை தொடர்ந்து, ஆதவன், 7ஆம் அறிவு, மன்மதன் அன்பு உள்ளிட்ட படங்களை அந்நிறுவனம் தயாரித்தது. இந்நிலையில், நடிகர் விஜய்யுடன் மீண்டும் கைகோர்க்க இருக்கும் உதயநிதி ஸ்டாலின், ஒரு படம் தயாரிக்க இருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இம்முறையும் நடிகர் விஜய்தான் உதயநிதியை படம் தயாரிக்க அழைத்திருப்பதாக தகவல் கிடைத்துள்ளது.


இது குறித்து செய்து வெளியிட்டுள்ள தனியார் பத்திரிக்கை ஒன்று, விஜய்யின் கோரிக்கையை ஏற்று உதயநிதி ஸ்டாலினும் படம் தயாரிக்க ஓக்கே சொல்லிவிட்டதாக தெரிகிறது. 2022-ம் ஆண்டு வெளியாகும் வகையில் உருவாக இருக்கும் இத்திரைப்படம் குறித்த மற்ற விவரங்கள் இன்னும் முடிவாகவில்லை. ரெட் ஜெயண்ட் பேனரில் உருவாகும் இத்திரைப்படம், ‘தளபதி 67’ அல்லது ‘தளபதி 68’ ஆக இருக்கலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது. நெல்சன் இயக்கத்தில் பீஸ்ட், வம்சி பைடபள்ளி இயக்கத்தில் உருவாகும் திரைப்படங்களை முடித்த பிறகே, இத்திரைப்படம் பற்றிய பேச்சு தொடங்கப்படும் என விஜய் - உதயநிதிக்கு நெருங்கிய கோலிவுட் வட்டாரம் தகவல் தெரிவித்துள்ளது.


மேலும் படிக்க: ‛டிராவிட்க்கு முன்பாக என்னிடம் பேசியது பிசிசிஐ’ ரிக்கி பாண்டிங் ஓபன் டாக் !


மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்


ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்


பேஸ்புக் பக்கத்தில் தொடர


ட்விட்டர் பக்கத்தில் தொடர


யூட்யூபில் வீடியோக்களை காண