2026 சட்டமன்ற தேர்தல் நெருங்கி வரும் நிலையில் தமிழக அரசியல் களம் நாளுக்கு நாள் பரபரப்பாக இயங்கி வருகிறது. குறிப்பாக விஜயின் தமிழக வெற்றி கழகம் இந்த தேர்தலில் மிகப்பெரிய தாக்கத்தை ஏற்படுத்தும் என எதிர்பார்க்கப்படுகிறது. ஒருபக்கம் தேர்தல் வேலைகளில் விஜய் தீவிரம் காட்டி வந்தாலும் மறுபக்கம் அவர் கட்சித் தொண்டர்கள் சமூக வலைதளங்களில் செய்யும் செயல்பாடுகள் கேலிக்குரியவையாக இருக்கின்றன. அந்த வகையில் நடிகை த்ரிஷாவின் இன்ஸ்டாகிராம் பக்கத்தில் தவெக தொண்டர்களின் கமெண்ட்கள் அனைவரது கவனத்தையும் ஈர்த்துள்ளன.
விஜய் த்ரிஷா கிசுகிசு
நடிகர் விஜய் மற்றும் த்ரிஷாவை வைத்து சினிமா வட்டாரங்களிலும் , ரசிகர்கள் மத்தியிலும் பல கிசுகிசுக்கள் பல காலமாக பேசப்பட்டு வருகின்றன. குறிப்பாக லியோ படத்திற்கு பின் விஜய் தனது அரசியல் வருகையை அறிவித்ததில் இருந்து இந்த கிசுகிசுக்கள் நாளுக்கு நாள் அதிகரித்தபடியே உள்ளன. த்ரிஷா தனது சமூக வலைதள பக்கத்தில் பதிவிடும் போட்டோக்களை எடுப்பது விஜய் தான் என்ற சிலர் இந்த ஃபோட்டோக்களை டீகோட் செய்து வருகிறார்கள். த்ரிஷா அணிந்த கூலர்ஸில் விஜயின் முகம் தெரிவதாக சிலர் கூறுகின்றன. நடிகை கீர்த்தி சுரேஷ் திருமணத்திற்கு விஜய் த்ரிஷா இருவரும் பிரைவேட் ஜெட்டில் பயணித்ததாகவும் கூறப்படுகிறது
அண்மையில் சைமா திரைப்பட விருது விழாவில் த்ரிஷாவிடன் விஜயின் புகைப்படத்தை காட்டியபோது அவர் வெட்கப்பட்டது பெரியளவில் பேசுபொருளானது. இந்த வதந்திகள் குறித்து விஜய் அல்லது த்ரிஷா இரு தரப்பினரும் வெளிப்படையாக பேசியதில்லை. விஜய் குறித்து பேசியபோது " அவரது கனவு எதுவானாலும் அது நிறைவேறட்டும். அதற்கு அவர் தகுதியானவர் ' என்று கூறினார்.
த்ரிஷா இன்ஸ்டாகிராம் பதிவில் தவெக தொண்டர்கள் கமெண்ட்
சமீபத்தில் த்ரிஷா தனது பிரைவேட் ஜெட்டில் இருந்து புகைப்படம் ஒன்றை வெளியிட்டார். இந்த பதிவிற்கு அவர் " அடுத்து எங்க' என கேப்ஷன் இட்டார். இந்த பதிவின் கீழ் தவெக தொண்டர்களின் கமெண்ட்ஸ் தான் தற்போது சமூக வலைதளத்தில் பேசுபொருள். ' எலக்ஷன் வர வரயும் நீ கொஞ்சம் சும்மா இரும்மா' என ஒருவர் கமெண்ட் செய்திருக்கிறார். " நீ பாட்டுக்கு எதையாவது போட்டுவிட்டு போயிடுற' என மற்றொருவர் கமெண்ட் செய்துள்ளார். ' நீ சி.எம் ஆகாம விட மாட்ட போல இருக்கேன் ' என மற்றொருவர் கமெண்ட் செய்துள்ளார்.