விஜய் டிவியால் புகழ்பெற்ற நடிகர் புகழ் தன் வாழ்நாளில் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்துடன் ஒரு ஃபிரேமிலாவது தோன்றிவிட வேண்டும். இல்லாவிட்டால் ஒரே ஒருமுறையாவது அவரை நேரில் பார்த்துவிட வேண்டும் என்று விருப்பம் தெரிவித்துள்ளார்.


குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை பலரின் stress buster ஆகவும், மிகப்பெரிய அளவில் ஹிட் அடித்த ஷோ தான் குக் வித் கோமாளி. மற்ற குக்கிங் நிகழ்ச்சிகளை விட வித்தியாசமாக கோமாளிகளும் பங்கேற்கும் இந்த நிகழ்ச்சியில் மணிமேகலை, புகழ், சிவாங்கி, பாலா, சுனிதா போன்ற பல கோமாளிகள் கலந்துக்கொண்டனர். 


குறிப்பாக மற்ற கோமாளிகளை விட மக்களிடம் மிகவும் பிரபலமானவர் தான் புகழ். இந்நிகழ்ச்சிகளுக்கு முன்னதாக பல காமெடி நிகழ்ச்சிகளில் பங்கேற்றிருந்தாலும் இந்த நிகழ்ச்சி மட்டுமே புகழுக்கு ஏராளமாக ரசிகர்களைப்பெற்று தந்தது.


இப்படி முதல் சீசன், இரண்டாவது சீசன், மூன்றாவது சீசன் என இவரின் லூட்டிகளுக்கு பஞ்சமே  இல்லாமல் இருந்தது. 


குக் வித் கோமாளி கிடைத்த புகழுக்கு பிறகு புகழ் தமிழ் சினிமாவில் வாய்ப்பு கிடைத்து சந்தானத்தின் 'சபாபதி', அஜித்தின் 'வலிமை', அஸ்வின் நடித்த என்ன சொல்லப் போகிறாய், சூர்யா நடித்த எதற்கும் துணிந்தவன் உள்ளிட்ட சில படங்களில் நகைச்சுவை வேடங்களில் நடித்துள்ளார், மேலும் பொன்ராம் இயக்கத்தில் விஜய் சேதுபதியின் புதிய படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கிறார்.


புகழ் தற்போது சினிமாவில் தீவிரமாக உள்ளதாகவும், 'மிஸ்டர் ஜூ கீப்பர்' என்ற படத்தில் ஹீரோவாகவும் நடித்து வருகிறார்.


இந்நிலையில் தான் புகழ் தன் வாழ்நாளில் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்துடன் ஒரு ஃபிரேமிலாவது தோன்றிவிட வேண்டும். இல்லாவிட்டால் ஒரே ஒருமுறையாவது அவரை நேரில் பார்த்துவிட வேண்டும் என்று விருப்பம் தெரிவித்துள்ளார்.


புகழ், சினிமாத் துறையில் புகழின் உச்சியை எட்டிவரும் வேகத்தைப் பார்த்தால் ரஜினியின் அடுத்தப் படத்தில் தலையைக் காட்டினால் கூட சந்தேகப்படுவதற்கில்லை எனக் கூறுகிறது கோடம்பாக்கம் வட்டாரம்.


பிஎம்டபிள்யு போஸ்:


புகழ் அண்மையில் bmw நீல நிற கார் பக்கத்தில் நின்று எடுத்த கொண்ட புகைப்படம் இன்ஸ்டாகிராமில் வைரலானது. அடடா மனிதர் அதற்குள் இவ்வளவு சம்பாதித்துவிட்டாரே என்று சிலர் உச்சுக் கொட்ட, அவர் அந்தப் புகைப்படத்துடன் பகிர்ந்த கேப்ஷன் கவனம் ஈர்த்தது.






அந்த கேப்ஷனில் ”இயலாமல் இறந்து போகலாம்; முயலாமல் முடிந்துவிடவே கூடாது” என்று பதிவிட்டிருந்தார். அப்புறம் தான் விஷயம் வெளியில் வந்தது. அது மணிமேகலையின் கார் என்பது உறுதியானது.