பாண்டியன் ஸ்டோர்ஸ் 2 சீரியலானது நீண்ட நாட்களுக்கு பிறகு பரபரப்பாக சென்று கொண்டிருக்கிறது. ஏற்கனவே பாண்டியனின் மகன்களான செந்தில் மற்றும் கதிர் இருவரும் தாங்களாகவே திருமணம் செய்து கொண்டனர். சரவணன் மட்டுமே பெற்றோர்களால் நிச்சயிக்கப்பட்ட திருமணம் செய்தார். இப்போது பாண்டியனின் கடைசி மகளான அரசியும் தனது விருப்பப்படி தனது குடும்பத்தை காப்பாற்ற வேண்டும் என்பதற்காக தனக்கு தானே தாலி கட்டிக் கொண்டுள்ளார்.

Continues below advertisement


இது பாண்டியன் குடும்பத்திற்கு பேரதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. ஏற்கனவே பாண்டியனின் அக்கா மகனுக்கும், அரசிக்கும் திருமண நிச்சயதார்த்தம் நடந்த நிலையில், திருமணமும் நடக்க இருந்தது. ஆனால், அதற்குள்ளாக குமாரவேலுவை சந்தித்து பேச சென்ற அரசி அவரிடம் வசமாக மாட்டிக் கொண்டார்.


இதனால், எல்லோரும் பாண்டியனின் மகள் ஓடி போய்விட்டாள் என்று பேசுவார்களே என்று கருதிய அரசி தனது குடும்பத்தை காப்பாற்ற வேண்டும் என்பதற்காக தனக்கு தானே தாலி கட்டிக் கொண்டார். 




இதையடுத்து பாண்டியனின் அக்கா குடும்பத்தினர் அசிங்கப்பட்ட நிலையில், சாபம் விட்டு சென்றனர். இதற்காகத்தான் அவசர அவசரமாக அரசிக்கு திருமண ஏற்பாடுகள் செய்யப்பட்டதாக கூறி பாண்டியனை கடுமையாக வசை பாடினர். இந்த நிலையில் தான் இன்றைய 492ஆவது எபிசோடில் அரசி பாண்டியனின் காலில் விழுந்தார். ஆனால், பாண்டியன் கண்டு கொள்ளவே இல்லை. எப்படியோ குமாரவேலு தான் அரசியை மிரட்டி திருமணம் செய்து கொண்டதாக கதிர், செந்தில் என்று ஆக்ரோஷமாக பேச, இல்லை இல்லை எனது விருப்பப்படி தான் இந்த திருமணம் நடந்ததாக கூறினார்.


முத்துவேல் மற்றும் சக்திவேல் இருவரும் குமாரவேலுவை திட்ட அரசி அவரை யாரும் திட்ட வேண்டாம். காதலுக்கு உண்மையாக இருக்க வேண்டும் என்பதற்காக என்னை திருமணம் செய்து கொண்டார். நான் இல்லையென்றால் விஷம் குடித்து தற்கொலை செய்து கொள்வேன் என்றார். மேலும் எங்களுடைய திருமணம் மாரியம்மன் கோயிலில் தான் நடைபெற்றது என்றார்.




இது குமாரவேலுவிற்கு அதிர்ச்சியை ஏற்படுத்தியது. 2 மாத காதலுக்கு உண்மையாக இருக்க நினைத்த நீ பெற்று வளர்த்த அப்பாவுக்கு உண்மையாக இருக்க நினைக்கவில்லை. உறவினர்கள் எல்லோருமே கல்யாண மண்டபத்திற்கு வருவார்களே, எல்லோருமே கேட்பார்களே உன்னுடைய அப்பா என்ன செய்வார்? ஏது செய்வார் என்று நினைக்கவில்லையே என்று ஆதங்கப்பட்டார். இது எல்லாவற்றிற்கும் காரணம் நீ தான் என்று செந்தில், கதிர், சரவணன் என்று எல்லோருமே குமாரவேலுவிடம் சண்டைக்கு சென்றார். கடைசியாக இந்த பிரச்சனையில் குறுக்கிட்ட காந்திமதி நீங்கள் சண்டை போட்டுக் கொண்டாலும் அவர்கள் இருவரும் காதலித்தார்கள். வேறு யாரையும் கல்யாணம் பண்ணவில்லையே, தாய்மாமா மகனைத்தான் திருமணம் செய்திருக்கிறார் என்று தன்னுடைய பேரன் - பேத்திக்கு ஆதரவாக பேசுகிறார்.


மேலும், ஏன் நீ லவ் பண்ணி தான் கல்யாணம் பண்ண, கதிரும், ராஜீயும் லவ் பண்ணி தான் கல்யாணம் பண்ணாங்க. இப்போ இவங்க இருவரும் கல்யாணம் பண்ணிக்கிட்டாங்க. இதுல என்ன தப்பு என்று கூறி குமாரவேலு மற்றும் அரசியை தனது வீட்டிற்குள் அழைத்துச் சென்றார். தானும், குமாரவேலுவும் ஒன்றாக எடுத்துக் கொண்ட புகைப்படத்தை எல்லோருக்கும் காட்டி குமாரவேலு தனது காதலித்ததாக கூறி எல்லோரையும் நம்ப வைத்தார் அரசி. ஆனால், இதெல்லாம் குமாரவேலுவை பழி பழிவாங்குவதற்காக தான் என்பது மற்றவர்களுக்கு தெரியவில்லை என்றாலும் குமரவேல் எதுவும் சொல்லமுடியாமல் குமுறிக் கொண்டிருக்கிறார் .