விஜய் டிவியில் ஒளிபரப்பாகும் நீயா நானா நிகழ்ச்சியில் இந்த வார நிகழ்ச்சிக்கான ப்ரோமோ வெளியாகி பார்வையாளர்களை யோசனையில் ஆழ்த்தியுள்ளது.
சின்னத்திரை நிகழ்ச்சிகளுக்கு காலம் கடந்தாலும் மவுசு என்றும் குறையாமல் தான் உள்ளது. ஏனென்றால் பல ஆண்டுகளுக்கு முன்னால் ஒளிபரப்பான நிகழ்ச்சிகளை மீண்டும் வேறு நிகழ்ச்சிகள் இல்லாத நேரத்தில் ஒளிபரப்பினால் கூட டிவி முன் உட்கார்ந்து பார்ப்பவர்கள் ஏராளம். இதனை கருத்தில் கொண்டு தான் ஒவ்வொரு சேனல்களும் விதவிதமான நிகழ்ச்சிகளை ஒளிபரப்பி வருகின்றன. சீரியல்கள் தான் என்றும் மக்களிடம் அதிக வரவேற்பை பெற்றதாக உள்ளது.
அதனைத் தொடர்ந்து காமெடி மற்றும் நடன ரியாலிட்டி நிகழ்ச்சிகள் உள்ளது. அந்த வகையில் பார்வையாளர்களிடம் அதிக வரவேற்பை பெறுவது விவாத நிகழ்ச்சிகள் பல தளங்களில் ஒளிரப்பாகி வருகிறது. அதில் விஜய் டிவியில் ஒளிபரப்பாகும் நீயா நானா நிகழ்ச்சி முதலிடம் பெறும் அளவுக்கு ரசிகர்களின் விருப்பமான ஒன்றாக உள்ளது. கோபிநாத் இந்த நிகழ்ச்சியை பல ஆண்டுகளாகவே தொகுத்து வழங்கி வருகிறார்.
ஒவ்வொரு வாரமும் விதவிதமான தலைப்பில் நிகழ்ச்சி ஒளிபரப்பாகும். சுவாரஸ்யமான விவாதம் மூக வலைத்தளங்களிலும் எதிரொலிக்கும். இப்படியான நிலையில், இந்த வாரம் “வரவு எட்டணா செலவு பத்தணா” என்ற தலைப்பில் விவாதம் நடக்கிறது. அதாவது வாங்கும் சம்பளத்தில் செலவுகளை அடக்க முடியுமா, இல்லையா என்பது தான் இந்த விவாதத்தின் பொருள். இதனடிப்படையில் செலவுகளை கட்டுப்படுத்த முடியாமல் திணறுபவர்கள் ஒரு பக்கம், வரவுக்குள் செலவுகளை அடக்க ஐடியா கொடுப்பவர்கள் இன்னொரு பக்கம் என நிகழ்ச்சி செல்கிறது.
இதன் ப்ரோமோக்கள் வெளியாகியுள்ளது. அதில், ஐடியா கொடுப்பவர்கள் பகுதியில் இருந்து, வாங்கும் சம்பளத்தை காட்டிலும் மேற்படி வருமானம் வரும் வகையில் ஏதாவது செய்யலாம் என சொல்லப்படுகிறது. அதற்கு, திணறுபவர்கள் பக்கம் பேசும் ஒரு பெண், “நான் எக்ஸ்ட்ரா வருமான வருவதற்கான முயற்சிகள் எல்லாம் போட்டும் என்னால் முடியவில்லை” என தெரிவிக்கிறார்.
இதனைத் தொடர்ந்து இதே பக்கத்தில் பேசும் இன்னொரு நபர், “எக்ஸ்ட்ரா வருமானம் வரும் பிசினஸை ரோட்டுல என்ன கூறுபோட்டி விக்குறாங்களா? .. என்னால வாழ முடியலன்னு சொல்றாங்க. நீங்க எக்ஸ்ட்ராவா வருமானம் பண்ண சொல்றீங்க. ஏற்கனவே 10 மணி நேரம் வேலை பாக்குறாங்க. அவங்க நைட்டுல இன்னும் 4 மணி நேரம் வண்டி ஓட்டி செத்துப்போ என்ற ரீதியில் தான் நாம பேசுகிறோம்”என ஆவேசமாக தெரிவிக்கிறார்.