விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகும் பெரும்பான்மையான டி.வி. ஷோக்கள், சீரியல்களுக்கு ரசிகர்களுக்கு மத்தியில் அமோக வரவேற்பு இருக்கும். பிக்பாஸ், குக் வித் கோமாளி போன்று பல்வேறு ரியாலிட்டி ஷோக்கள் ஒளிபரப்பாகி வருகிறது.
ரியாலிட்டி ஷோக்கள் மட்டுமின்றி விஜய்தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகும் பாரதி கண்ணம்மா, பாண்டியன் ஸ்டோர்ஸ், மௌன ராகம், ராஜாராணி, பாக்கியலட்சுமி போன்ற சீரியல்களுக்கும் ரசிகர்கள் அதிகளவு ஆதரவை அளித்து வருகின்றனர்.
இந்த நிலையில், விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகிய ஈரமான ரோஜாவே தொடர் இந்தியில் ரீமேக் ஆக உள்ளது. ஈரமான ரோஜாவே சீசன் 1 தற்போது இந்தியில் “வோ தோ ஹை அல்பேலா” என்ற பெயரில் ரீமேக் செய்யப்பட உள்ளது. கடந்த 2018ம் ஆண்டு முதல் ஒளிபரப்பான ஈரமான ரோஜாவே தொடர் 807 எபிசோட்களுடன் கடந்தாண்டு ஆகஸ்ட் மாதம் நிறைவு பெற்றது. அப்போது அதற்கு ஏகப்பட்ட ரசிகர்கள் ஆதரவை அளித்து வந்தனர்.
இதன் காரணமாக, தற்போது, ஈரமான ரோஜாவே சீசன் 2 ஒளிபரப்பாகி வருகிறது. ஈரமான ரோஜாவே சீரியல் “மனசிச்சு சூடு” தெலுங்கிலும், “ஜூவா ஹூவாகிதே” என்ற பெயர் கன்னடத்திலும் ரீமேக் செய்யப்பட்டு ஒளிபரப்பாகி வருகிறது. இந்தியில் ரீமேக் செய்யப்பட உள்ள ஈரமான ரோஜாவே தொடரில் ஷாஹீர் கதாநாயகனாக நடித்துள்ளார். இந்த தொடர் வரும் மார்ச் 14-ந் தேதி முதல் ஸ்டார்பரத் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாக உள்ளது.
இந்தியில் அல்லது பிற மொழிகளில் சூப்பர்டூப்பர் ஹிட்டான சீரியல்களையே தமிழ் மொழியில் இத்தனை நாட்களாக ரீமேக் செய்து வந்தனர். தற்போது, தமிழில் மெகா ஹிட்டான சீரியலை இந்தியில் ரீமேக் செய்வது தமிழ் ரசிகர்களுக்கு இன்ப அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்
ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்