விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வரும் பாக்கியலட்சுமி சீரியலுக்கு என்று ஏராளமான ரசிகர்கள் உள்ளனர். விஜய் தொலைக்காட்சியின் பிரதான சீரியல்களின் வரிசையில் பாக்கியலட்சுமி சீரியலுக்கு என்று தனி இடமே உண்டு. இந்த நிலையில், பாக்கியலட்சுமி சீரியலில் அடுத்தடுத்து நடக்கும் விஷயங்கள் ரசிகர்களின் ஆர்வத்தை தூண்டியுள்ளது.
பாக்கியலட்சுமியின் கணவர் கோபியின் கள்ளக்காதல் விவகாரத்தில் சீரியல் ரசிகர்கள் எல்லாரும் செம டென்சனில் உள்ளனர். கோபியின் கள்ளக்காதல் விவகாரம் கோபியின் அப்பா, செல்வி அக்கா மற்றும் கோபியின் மகன் எழில் ஆகியோருக்கு மட்டுமே இதுவரை தெரியவந்துள்ளது. காரணமே இல்லாமல் பாக்கியலட்சுமியை திட்டித்தீர்த்து வரும் கோபி, தனது குடும்பத்திற்கே தெரியாமல் விவகாரத்து வரை சென்றுள்ளார்.
இந்த நிலையில், ராதிகா மற்றும் மயூவுடன் சுற்றுலாவிற்கு வந்துள்ள கோபியின் கள்ளக்காதல் ஆட்டம் முடிவுக்கு வரப்போகிறதா? அல்லது வழக்கம்போல கோபி தப்பிக்கப்போகிறாரா? என்பது இந்த வாரம் தெரிந்துவிடும். பாக்கியலட்சுமியின் புதிய ப்ரோமோவை விஜய் தொலைக்காட்சி வெளியிட்டுள்ளது.
அதில்,ராதிகாவுடன் பிக்னிக் சென்றுள்ள கோபி சென்றுள்ள அதே இடத்திற்கே கோபியின் ஒட்டுமொத்த குடும்பத்தையும் கோபியின் மகன் எழில் அழைத்து வருகிறான். வழக்கம்போல, கோபிக்கு இனியா மூலமாக தனது குடும்பமே தான் இருக்கும் இடத்திற்கு வந்திருப்பது தெரிய வருகிறது. இதனால், அதிர்ச்சியடைந்த கோபி ராதிகாவிடம் பொய்களை அள்ளிவிட்டு அந்த இடத்தில் இருந்து எஸ்கேப் ஆகிறார்.
ஆனாலும், தனது மகன் எழில் கண்ணில் சிக்கி விடுகிறார். எழிலும் தனது தந்தை கோபி யாரோ ஒரு பெண்ணுடன் காரில் ஏறி செல்வதை பார்ப்பது போல இந்த வார ப்ரோமோ முடிகிறது. கோபி ஒரு பெண்ணுடன் பழகி வருவதாக கோபியின் தந்தைக்கும், எழிலுக்கும், செல்வி அக்கா ஆகிய மூன்று பேருக்கு மட்டுமே தெரிய வரும். கோபியின் தந்தைக்கு மட்டுமே ராதிகாதான் கோபியுடன் பழகி வரும் பெண் என்பது தெரிய வரும். பாக்கியலட்சுமி, செல்வி அக்கா இருவருக்கும் ராதிகா நல்ல பழக்கம் ஆனவர்கள் என்பதும் குறிப்பிடத்தக்கது.
விஜய் தொலைக்காட்சியின் டி.ஆர்.பி. ரேட்டிங்கை அதிகரிக்கச் செய்யும் பாக்கியலட்சுமி சீரியலில் கோபியின் கள்ளக்காதலாலே பல எபிசோட்கள் கடந்து கொண்டிருக்கின்றன. இந்த நிலையில், கோபியின் கள்ளக்காதல் ஆட்டம் ஒவ்வொரு முறையும் முடிவுக்கு வரும் என்று எதிர்பார்த்து காத்திருக்கும் ரசிகர்களுக்கு ஏமாற்றங்களே நீடித்து வருவதால் இந்த வாரம் பாக்கியலட்சுமி தொடரில் மிகப்பெரிய டுவிஸ்ட் இருக்கும் என்று எதிர்பார்க்கலாம். ரசிகர்களின் எதிர்பார்ப்பை இந்த வாரம் பாக்கியலட்சுமி தொடர் நிறைவேற்றுமா? அல்லது வழக்கம்போல அடுத்த வாரமும் தொடருமா? என்று பொறுத்திருந்து பார்ப்போம்.
மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்
ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்