விஜய் டிவியில் ஒளிப்பரப்பாகி வரும் சீரியல்களில், ரசிகர்களின் ஏகோபித்த வரவேற்பை பெற்ற சீரியல் பாக்கியலட்சுமி. இந்த சீரியலில் செழியன் என்ற கதாபாத்திரத்தில் நடித்து வருபவர் ஆர்யன். இவர் தற்போது இந்த சீரியலில் இருந்து விலகப்போவதாக தகவல் வெளியாகியிருக்கிறது.
காரணம் என்ன என்று விசாரித்தால் ஆர்யனுக்கு தற்போதெல்லாம் நிறைய பட வாய்ப்புகள் வருகிறதாம். அந்த வாய்ப்புகளை பயன்படுத்துவதற்காகத்தான் இந்த முடிவு என சொல்லப்படுகிறது. சரி அவர் போய் விட்டால் அந்த கதாபாத்திரத்தில் யார் நடிப்பார் என்று கேட்கிறீர்களா, அதற்கும் பதில் இருக்கிறது. ஆம், ஆர்யன் நடித்த செழியன் கதாபாத்திரத்தில், விஜய் டிவியில் ஒளிப்பரப்பாகி வரும், ராஜ பார்வை சீரியலில் நடித்து வரும், விகாஷ் சம்பத் நடிக்க இருப்பதாக சொல்லப்படுகிறது.
ஜிம் கோச்சான ஆர்யன் சென்னை ஆவடியை சேர்ந்தவர். இவரது இயற்பெயர் வேலு லட்சுமணன். விஜய் டிவியில் ஒளிப்பரப்பான கடைக்குட்டி சிங்கம் சீரியலில் நெகட்டிவ் கதாபாத்திரத்தில் நடித்ததன் மூலம் பிரபலமடைந்தார். இவருக்கு செம்பருத்தி சீரியலில் நடித்த ஷபானாக்கும் இடையே பழக்கம் ஏற்பட்ட நிலையில், இருவருக்கும் இடையே காதல் மலர்ந்தது. இந்தக் காதல் கல்யாணத்திலும் முடிந்தது.
ஆர்யனுக்கு பதில் வேறு யாராவது வந்தாலும், அவர் எப்படி சீரியலுக்கு செட் ஆவார் என்பதை பார்த்துவிட்டுத்தான் சொல்லமுடியும் என்கிறார்களாம் ரசிகர்கள்