பாண்டிராஜ் இயக்கத்தில் உருவாகியுள்ள இந்தப்படத்தில் சூர்யாவுடன் சத்யராஜ் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். படத்தின் கதாநாயகியாக, பிரியங்கா மோகனன் நடித்துள்ள நிலையில், வில்லனாக நடிகர் வினய் நடித்திருக்கிறார். 5 மொழிகளில் வெளியாக இருக்கும் இந்தத்திரைப்படத்தின் ட்ரைலர் இன்று வெளியானது. இதற்கான விழா சென்னை சத்யம் தியேட்டரில் இன்று நடைபெற்றது. விழாவில் உக்ரைன் விவகாரம் குறித்து பேசிய, ரசிகர்களுக்கு உத்வேகம் தரும் வகையிலும் பேசியிருக்கிறார்
இழக்கறதுக்கு தயாரா இருங்க
அதில் அவர் பேசும் போது, “ இழக்கறதுக்கு தயாரா இருந்தோம் அப்படின்னா, அடையுறதுக்கு நிறைய இருக்கு.. அது நம்முடைய பழைய பழக்கவழக்கங்களாக இருக்கட்டும், பழைய மூட நம்பிக்கைகளா இருக்கட்டும் ஏன் அது நம்முடைய பழைய சிந்தனைகளா கூட இருக்கலாம். இதெல்லாம் நமக்கு செளகரியமா இருக்கலாம். இதெல்லாத்தையும் நம்ம விட்டுட்டு ஒரு புது முயற்சி எடுக்குறதுக்கு தயாரா ஆனோம் அப்படின்னா, தயார் ஆவதற்கு மைண்ட் எடுக்கக்கூடிய முடிவுக்கான நொடிதான் கஷ்டமா இருக்கும்.
அதுக்கப்புறமா வரக்கூடிய பயணம் ரொம்ப அழகானது. அதனால இழக்கறதுக்கு தயாரா இருந்தோம் அப்படின்னா அடையறதுக்கும் நிறைய இருக்கு. சத்யராஜ் மாமா ஊர் விட்டுட்டு, இங்க வந்து கஷ்டப்பட்டதால அவருக்கு இந்த இடம் கிடைச்சிருக்கு. வினயோட “முதன்முதலாக பாட்ட” போட்டுத்தான் நான் வொர்க் அவுட் பண்ணுவேன். வினய்யும் வித்தியாசமா முயற்சி பண்றாரு.. who moved my cheese ன்னு ஒரு புக் இருக்கு. அதுல வர்ற மாதிரி மாற்றத்துக்கு நீங்க தயாரா இருந்தீங்க அப்படின்னா அடையறதுக்கு நிறைய இருக்கு. வினய் இந்தப்படத்துல சூப்பரா பண்ணிருக்காரு.
நிறைய யோசிக்காதீங்க.. (நெஞ்சில் கைவைக்கிறார்..) இங்க என்ன சொல்லுதோ அத கேளுங்க.. அந்த சேஞ்சுக்கு ரெடியா இருங்க.. எண்ணம் போல் வாழ்கைன்னு சொல்வாங்க.. மனசுல என்ன நினைக்கிறேங்களோ அது நிச்சயமா நடக்கும். தம்பிகளுக்கு இத சொல்லணும்னு ஆசைப்பட்டேன்.” என்று பேசினார்.
மேலும் சூர்யா பேசியது:
அதில், ''நாம் கொண்டாடிக் கொண்டிருக்கும் இந்நேரம் உக்ரைனில் அறியாத, எதுவும் தெரியாத மக்கள் இந்தியாவைச் சேர்ந்தவர்களும் அங்கி சிக்கியுள்ளனர். எனக்கு கூட்டு பிரார்த்தனையில் நம்பிக்கையுள்ளது. அங்கிருப்பவர்கள் பாதுகாப்பாக வர வேண்டும். அரசு எல்லாமே செய்கிறது. ஆனால் சில வீடியோக்களை பார்த்தால் மனசு படபடக்குது. உயிர்ச்சேதம் ஏதுமின்றி அனைவரும் திரும்பி வர வேண்டும். அனைவரும் வேண்டிக்கொள்வோம். இரண்டரை வருஷம் கழித்து திரையரங்கில் வரப்போகுது.