தி கோட்


வெங்கட் பிரபு இயக்கத்தில் விஜய் நடித்துள்ள தி கோட் படம் நாளை செப்டம்பர் 5-ஆம் தேதி வெளியாக இருக்கிறது.  தமிழ் , இந்தி , மலையாளம் , கன்னடம் ,தெலுங்கு என அனைத்து மொழிகளிலும் உலகம் முழுவதும் 5000 திரையரங்குகளில் இப்படம் வெளியாக இருக்கிறது. ஏ.ஜி.எஸ் என்டர்டெயின்மெண்ட் இப்படத்தை தயாரித்துள்ளது. இதற்கு முன்னதாக விஜயின் பிகில் படத்தை இந்நிறுவனம் தயாரித்திருந்தது. கடந்த ஆண்டு வெளியான லியோ படத்திற்கு படம் ரிலீஸூக்கு முன்பாக பல்வேறு சிக்கல்கள் இருந்தன. 


கடைசி நேரம் வரை திரையரங்க உரிமையாளர்களுடன் ஒப்பந்தம் கையெழுத்தாகாமல் இருந்தது , வட மாநிலங்களில் முறையான ப்ரோமோஷன்களை செய்யாமல் இருந்தது லியோ படத்திற்கு ஒரு சின்ன பின்னடைவாக இருந்தது. அதே போல் இந்த ஆண்டும் ப்ரோமோஷன் வேலைகளை படக்குழுவினர் சரியாக கையாள்வார்களா என்கிற கேள்வி ரசிகர்களிடம் இருந்தது. ஆனால் அதில் எந்த குறையும் இல்லாமல் அனைத்து இடங்களிலும் ப்ரோமோஷன் வேலைகளை தீவிரப்படுத்தி இருக்கிறது படக்குழு. 


முதலில் படத்தை இந்தி மொழியில் வெளியிட வேண்டும் என்று ரசிகர்கள் கேட்டார்கள். இதனைத் தொடர்ந்து இந்தியில் படத்தை வெளியிடுவதற்கான ஏற்பாடுகளை செய்து. டெல்லி மெட்ரோ ரயில்களில் படத்திற்கான ப்ரோமோஷன் செய்யப்பட்டது.


டெல்லியைப் போலவே சென்னை மெட்ரோக்களில் படத்திற்கு ப்ரோமோஷன் செய்யவேண்டும் என்று ரசிகர்களின் ஆசைக்கிணங்க ப்ரோமோஷன் வேலைகள் தொடங்கின. 


தி கோட் ட்ரெய்லர் வெளியானபோது படத்தில் இளம் விஜயின் டீஏஜீங் குறித்து பல விமர்சனங்கள் எழுந்தன. உடனடியாக டீஏஜிங் மூலம் விஜய் லுக்கில்  சில திருத்தங்கள் செய்யப்பட்டன. தற்போது படம்  நாளை வெளியாக இருக்கும் நிலையில் ரசிகர்களை உற்சாகப்படுத்தும் வகையில் மற்றொரு முன்னெடுப்பை படக்குழு எடுத்துள்ளது. 


விஜயுடன் பேஸ் ஸ்வாப்






தந்தை விஜய் பைக் ஓட்ட பின்னால் இளம் விஜய் இடத்தில் ரசிகர்கள் தங்கள் முகத்தை பொருத்திக் கொள்ளலாம் . ஏ.ஜி.எஸ் தயாரிப்பு நிறுவனத்தின் இணையதளத்தில் ரசிகர்கள் இதை செய்து பார்க்கலாம். தற்போது விஜய் ரசிகர்கள் அனைவரும் இந்த எடிட் செய்து பார்த்து சமூக வலைதளங்களில் பகிர்ந்து வருகிறார்கள்.