தி கோட்
வெங்கட் பிரபு இயக்கத்தில் விஜய் நடித்த தி கோட் திரைப்படம் கடந்த செப்டம்பர் 5 ஆம் தேதி வெளியாகியது. ஏ.ஜி.எஸ் என்டர்டெயின்மெண்ட் தயாரித்த இப்படத்தில் பிரபு தேவா பிரஷாந்த் , சினேகா , லைலா , மோகன் , பிரேம்ஜி , மீனாக்ஷி செளதரி , ஜெயராம் உள்ளிட்டவர்கள் நடித்துள்ளார்கள். யுவன் ஷங்கர் ராஜா இசையமைத்துள்ளார்.
விஜயின் 68-வது படமாக வெளியான தி கோட் திரைப்படம் விஜய் ரசிகர்களுக்கு ஒரு பெரிய விருந்தாக அமைந்தது. விஜய் ரசிகர்கள் படத்தை கொண்டாடினாலும் மற்ற தரப்பு ரசிகர்களுக்கு படம் பெரிதாக வொர்க் அவுட் ஆகவில்லை. விமர்சனங்கள் எப்படி இருந்தாலும் வசூலில் தி கோட் திரைப்படம் மாபெரும் வெற்றிபெற்றுள்ளது
தி கோட் வசூல்
சுமார் 400 கோடி ரூபாய் பட்ஜெட்டின் உருவான படம் தி கோட். இப்படம் உலகளவில் 1000 முதல் 1500 கோடி வரை வசூலிக்கும் என பல யூகங்கள் முன்வைக்கப்பட்டன. தி கோட் திரைப்படம் முதல் நாளில் உலகளவில் ரூ 126 கோடி வசூலித்தது. அடுத்தடுத்து 4 நாட்களில் படம் ரூ 288 கோடி வசூலித்த நிலையில் ஒருவேளை சொன்னது போல 1000 கோடி வசூல் எடுத்துவிடுமோ என்று எதிர்பார்ப்பு கிளம்பியது. ஆனால் அடுத்தடுத்த வாரங்களில் படத்திற்கு கலவையான விமர்சனங்கள் வந்த நிலையில் படத்தின் வசூல் குறையத் தொடங்கியது.
கடந்த அக்டோபர் 3-ஆம் தேதி The Goat நெட்ஃப்ளிக்ஸில் வெளியாகியது. ஓடிடியில் படம் பார்த்த ரசிகர்கள் படத்தை இரண்டாவது ரவுண்ட் கொண்டாடி வருகிறார்கள். இந்நிலையில் தி கோட் திரைப்படத்தில் மொத்த வசூல் குறித்த தகவலை தயாரிப்பு நிறுவனம் அதிகாரப்பூர்வமாக வெளியிட்டுள்ளது. அதன்படி தி கோட் திரைப்படம் உலகளவில் ரூ 455 கோடி வசூலித்துள்ளது.
விஜய் நடிப்பில் கடந்த ஆண்டு வெளியான லியோ திரைப்படம் 600 கோடிக்கும் மேலாக வசூலித்தது. லியோ படத்துடன் ஒப்பிடுகையில் தி கோட் படத்தின் வசூல் குறைவு. ஆனால் படத்திற்கான ஓடிடி விற்பனை , சேட்டலைட் விற்பனை என எல்லாவற்றையும் சேர்த்து பார்க்கும்போது தயாரிப்பு நிறுவனத்திற்கு தி கோட் ஒரு லாபகரமான படமே