சீரியல்களுக்கு இருக்கும் அதே ஆதரவு ரியாலிட்டி ஷோக்களுக்கும் பார்வையாளர்கள் மத்தியில் நல்ல வரவேற்பு இருக்கிறது. அந்த வகையில் விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகும் பிக்பாஸ் நிகழ்ச்சியில் நடக்கும் ரகளை, சண்டை, துக்கம், சோகம், கொண்டாட்டம் என அனைத்தையும் ஒரே வீட்டிற்குள் பார்க்கும் போது மகிழ்ச்சி தான். தன்னை போன்று ஒருவர் பிரதிபலிப்பதை திரையில் ஒரு கதாப்பாத்திரமாக பார்த்து ரசித்திருப்போம். ஆனால், பிக்பாஸ் நிகழ்ச்சியில் எந்த ஒளிவு மறைவும் கிடையாது. எல்லாமே மக்கள் முன்பு பிரதிபலிக்கும். அதுவே இந்த நிகழ்ச்சியின் சிறப்பு. 

கடந்த வருடம் தொகுத்து வழங்கிய விஜய் சேதுபதி தான் மீண்டும் தொகுப்பாளராக வந்திருக்கிறார். அக்டோபர் முதல் வாரத்தில் ஷோ தொடங்கும் என ஏற்கனவே தகவல் வெளியானது. இந்நிலையில் தற்போது பிக் பாஸ் 9ம் சீசனின் ப்ரோமோவை விஜய் டிவி வெளியிட்டுயுள்ளது. நடிகர் விஜய் சேதுபதி இந்த நிகழ்ச்சியை தொகுத்து வழங்க இருப்பதை அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது. இன்னும் சில நாட்களில் போட்டியாளர் யார் என்பது குறித்த அறிவிப்பு வெளியாக வாய்ப்பு இருக்கிறது. 

ஆனால், இந்த சீசனில் அதிகம் குக் வித் கோமாளி நிகழ்ச்சியில் இருக்கும் பலர் தான் போட்டியாளர்களாக களம் இறங்க போவதாகவும் கூறப்படுகிறது. அதே நேரத்தில் பிக் பாஸ் 9 நிகழ்ச்சியில் வாட்டர்மெலன் ஸ்டார் கலந்து கொள்கிறார் என்று தகவல் வெளியாகியுள்ளது. அவர் பெயரை கேட்டதும் அவரா என்றே ஆச்சர்யப்படுகின்றனர். கூமாப்பட்டி தங்கபாண்டியை போட்டியாளர் தேர்வுக்கு அழைத்திருப்பதாகவும் கூறப்படுகிறது. 

பாரதி கண்ணம்மா சீரியல் வில்லி ஃபரினா ஆசாத், குக் வித் கோமாளி 6 நிகழ்ச்சியில் பங்கேற்றிருக்கும் உமைர் லத்தீஃப், ஷபானா ஷாஜஹான் ஆகியோரையும் ஆடிஷனில் கலந்துகொண்டதாகவும் ஏற்கனவே தகவல் வெளியானது. இந்த முறை கடுமையான சவால் நிறைந்த போட்டிகளை உருவாக்கியிருப்பதாகவும் கூறப்படுகிறது.