கோடி கோடியா வசூல் கொடுப்பவர்களின் பட்டியலில் நம்பர் 1 இடத்தில் இருப்பவர் தளபதி விஜய். தமிழ் சினிமாவில் 200 கோடிக்கும் அதிகமாக சம்பளம் வாங்கும் நடிகர்களின் பட்டியலிலும் நம்பர் 1 தளபதி தான். இப்போது தன்னோட கடைசி படமான தளபதி 69 படத்தில் பிஸியாக நடித்து வருகிறார். அதன் பிறகு அரசியல் எண்ட்ரி தான். கேரளா, சென்னை என பல இடங்களில் படப்பிடிப்பு பிஸியாக போய்க் கொண்டிருக்கிறது. 


இந்த படத்தை அஜித்தின் மாஸான இயக்குனர் எச் .வினோத் தான் இயக்கி வருகிறார். இதில், விஜய் உடன் இணைந்து பூஜா ஹெக்டே, பாபி தியோல், கவுதம் வாசுதேவ் மேனன், பிரகாஷ் ராஜ், நரேன் , பிரியாமணி, மமிதா பைஜூ, மோனிஷா பிளெஸி ஆகியோர் பலர் நடித்து வருகின்றனர். இவர்களுடன் வரலட்சுமி சரத்குமார், ஷிவராஜ் குமார் ஆகியோரும் நடிப்பதாக சொல்லப்படுகிறது. அனிருத் இசையமைக்கிறார். கேவிஎன் புரோடக்‌ஷன்ஸ் நிறுவனம் இந்தப் படத்தை தயாரிக்கிறது.




இந்த நிலையில் தான் இந்தப் படம் தெலுங்கில் நந்தமுரி பாலகிருஷ்ணா நடிப்பில் கடந்த ஆண்டு திரைக்கு வந்த பகவந்த் கேசரி படத்தின் தமிழ் ரீமேக் என்று தகவல் வெளியாகி வந்த வண்ணம் இருக்கிறது. ஏற்கனவே இயக்குநர் ஹெச் வினோத் இதைப் பற்றி கூறியிருக்கிறார். அதாவது இது என்னோட படமாக இருக்காது. முழுக்க முழுக்க விஜய்க்கான படமாக இருக்கும். அது கமர்ஷியலாக இருக்கும் என்று கூறியிருந்தார்.
தளபதி 69 அரசியல் த்ரில்லர் கதையை மையப்படுத்தி திரைக்கு வர இருக்கிறது. இதில், அரசியலைப் பற்றிய வசனங்கள், பாடல்கள் எல்லாம் இடம் பெறும் என்று தெரிகிறது. இந்தப் படம் முற்றிலும் வேறுபட்ட கண்ணோட்டத்தில் எடுக்கப்பட்டும் என தெரிவித்துள்ளார்.


தளபதியை நடிக்கும் படங்களில் போஸ்டர் வருவதற்கு முன்பே... இந்த படம் அந்த படத்தின் காப்பி, இந்த படத்தின் காப்பி என சில சர்ச்சைகளில் சிக்குவதற்கு முக்கிய காரணம், விஜய்க்கு சூப்பர் டூப்பர் ஹிட் கொடுத்த கில்லி, படம் தெலுங்கு படமான ஒக்கடு படத்தின் தமிழ் ரீமேக். இதே போன்று தான் தெலுங்கில் மகேஷ் பாபு நடிப்பில் வெளியான போக்கிரி படத்தை தான் தமிழில் ரீமேக் செய்தார்கள். அதுமட்டுமா சமீபத்தில் திரைக்கு வந்த லியோ படமும் கூட ஹாலிவுட் படமான ஹிஸ்டரி ஆஃப் வையல்ன்ஸ் என்ற படத்தின் ரீமேக்குனு கூட சொன்னாங்க.


இதே போன்று தான் கோட் ஹாலிவுட் படமான லூப்பர் படத்தின் தமிழ் ரீமேக் என்றும், 'மாஸ்டர்', கொரியன் படமான சைலன்ஸ் ரீமேக் என்றும் கூறினர். இவ்வளவு ஏன் விஜய் மற்றும் அட்லி காம்பினேஷனில் தெறி, மெர்சல் மற்றும் பிகில் ஆகிய 3 படங்களுமே தமிழ் படங்களின் காப்பி என்றெல்லாம் செய்தி வெளியானது எல்லோருக்கும் தெரியும்.




இப்படி விஜய் ஒவ்வொரு படத்தில் நடிக்கும் போது அவரை சுற்றியும், அவரோட படத்தையும் சுற்றியும் வதந்திகள் பரவி வருவது வாடிக்கையாகி வருகிறது. அந்த வகையில் தான் இப்போது தளபதி 69 படமானது பகவந்த் கேசரி படத்தின் தமிழ் ரீமேக் என்று சொல்லப்படுகிறது. எது எப்படியோ படம் வெளியான பிறகு தான் படத்தின் கதை பற்றி தெரிய வரும் என்பது குறிப்பிடத்தக்கது.


இதுவரையில் விஜய் ரூ.1000 கோடி வசூல் படங்களின் பட்டியலில் இடம் பெறவில்லை. ஆனால், இந்தப் படம் அந்தப் பட்டியலில் இடம் பிடிக்கும் என்று தெரிகிறது. இயக்குநர் வினோத் அதற்கான வேலையில் தீவிரமாக இருக்கிறார். இந்தப் படம் ஹிட் படமாக விஜய்யின் சினிமா வாழ்க்கையில் மறக்க முடியாத படமாக இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.