கர்ணன் திரைப்படம் கடந்த வெள்ளியன்று திரையங்குகளில் வெளியாகி தனுஷ் ரசிகர்களை பெரும் மகிழ்ச்சியில் ஆழ்த்தியுள்ளது. இயக்குநர் மாரி செல்வராஜ் தயாரிப்பாளர் கலைப்புலி எஸ். தாணு மற்றும் இசையமைப்பாளர் சந்தோஷ் நாராயணன் ஆகியோர் சென்னை ரோகிணி திரையரங்கில் முதல் காட்சிக்கு ரசிகர்களோடு இணைந்து கர்ணன் திரைப்படத்தை பார்த்தனர்.

#VijaySethupathi congratulating #MariSelvaraj "Arputhamana Padam", after watching #Karnan | #Dhanush pic.twitter.com/ErwqwU8jPx
— Cinema Academy India (@CinemaAcademyIn) April 10, 2021

திரையரங்குகள் 50 சதவிகித இருக்கைகளோடு மட்டுமே இயங்கிவரும் நிலையில் கர்ணன் திரைப்படத்துக்கான ஆன்லைன் டிக்கெட் முன்பதிவுகள் கொரோனா அச்சத்தால் சற்று மந்தமாகவே உள்ளது என்று கூறப்படுகிறது. பல திரையரங்குகளில் 3 முதல் 8 காட்சிகள் வரை திரையிடப்படும் நிலையில் இன்னும் முக்கிய திரையரங்குகளில் ஹவுஸ்ஃபுல் ஆகாமல் உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
இதுஒருபுரம் இருக்க படத்தை பார்த்த பிரபல நடிகர் விஜய்சேதுபதி, இயக்குநர் மாரி செல்வராஜை கட்டித்தழுவி செல்வராஜ் கையில் முத்தமிட்டு தனது வாழ்த்துக்களை கூறினார். அற்புதமான படம் நல்லா இருப்ப நீ, லவ் யூ என்று கூறி தனது மகிழ்ச்சியை வெளிப்படுத்தினர் விஜய் சேதுபதி.