இந்த படத்தில் பவிஷ் நாராயணன் மற்றும் நாக துர்கா முதன்மை கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். இந்த ஃபர்ஸ்ட் லுக்கை மக்கள் செல்வன் விஜய் சேதுபதி வெளியிட்டது, படத்திற்கான எதிர்பார்ப்பை மேலும் அதிகரித்துள்ளது.

Continues below advertisement

ஒரு சிறப்பு மற்றும் நினைவாக இருக்கும் தருணமாக, படக்குழுவினர் விஜய் சேதுபதி அவர்களை, இயக்குநர் தியாகராஜன் குமாரராஜா இயக்கத்தில் உருவாகும் அவரது புதிய திரைப்படமான 'பாக்கெட் நாவல்' படப்பிடிப்பு தளத்தில் சந்தித்தனர். அங்கு அவர் மனமுவந்து “லவ் ஓ லவ்” படத்தின் ஃபர்ஸ்ட் லுக்கை வெளியிட்டு, முழு படக்குழுவிற்கும் தனது வாழ்த்துகளைத் தெரிவித்தார். இந்த அன்பான செயல், படத்திற்கு கூடுதல் கவனத்தையும் உற்சாகத்தையும் ஏற்படுத்தியுள்ளது.

Zinema Media and Entertainment Ltd, தினேஷ் ராஜ் மற்றும் Creative Entertainers & Distributors நிறுவனத்தின் G. தனஞ்செயன் ஆகியோரின் தயாரிப்பில், மகேஷ் ராஜேந்திரன் எழுதி இயக்கியுள்ளார். பவிஷ் நாராயணன் (நிலவுக்கு என்மேல் என்னடி கோபம் புகழ்) மற்றும் பிரபல தெலுங்கு யூடியூப் பிரபலமாக இருந்து, தமிழ் சினிமாவில் அறிமுகமாகும் நாக துர்கா இணைந்து நடித்துள்ளனர்.

Continues below advertisement

படத்தின் மற்ற முக்கிய அம்சமாக, புகழ்பெற்ற இயக்குநர்களான செல்வராகவன் மற்றும் K. S. ரவிக்குமார் ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். இவர்களுடன் வனிதா விஜயகுமார் , ஆதித்யா கதிர் , ரம்யா உள்ளிட்ட பலரும் நடித்துள்ளனர்.

இப்படத்திற்கு மேலும் புத்துணர்ச்சி சேர்க்கும் வகையில், வடசென்னையைச் சேர்ந்த திறமையான இசையமைப்பாளர் ஜோடி FOXn இசையமைக்கின்றனர். இதில் பிரதீப் PJ மற்றும் வேயின் பாவே ஆகியோர் இணைந்துள்ளனர். இவர்களின் தனித்துவமான மற்றும் பரிசோதனையான இசை பாணி, படத்திற்கு உணர்ச்சி மற்றும் இளமை நிறைந்த இசை அனுபவத்தை வழங்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.ஒளிப்பதிவை P. G. முத்தையா மேற்கொள்கிறார். தேசிய விருது பெற்ற N. B. ஸ்ரீகாந்த் எடிட்டிங்கை கவனிக்கிறார். கலை இயக்குநராக P. மகேந்திரன் பணியாற்றுகிறார். இப்படம் வலுவான தொழில்நுட்பக் குழுவின் ஆதரவுடன் உருவாகி வருகிறது.

படப்பிடிப்பு இறுதிக்கட்டத்தை நெருங்கி வரும் நிலையில், Post Production பணிகளும் ஒரே நேரத்தில் நடைபெற்று வருகின்றன. Love Oh Love திரைப்படம் 2026 கோடை அன்று திரையரங்குகளில் வெளியாக திட்டமிடப்பட்டுள்ளது.இளமை, உணர்ச்சி மற்றும் நவீன கால உறவுகளை மையமாகக் கொண்ட ஒரு புதுமையான காதல் திரைப்படமாக Love Oh Love உருவாகி வருகிறது. இதன் ஃபர்ஸ்ட் லுக்கை விஜய் சேதுபதி வெளியிட்டிருப்பது, ரசிகர்கள் மற்றும் திரையுலகில் இந்தப் படத்திற்கான எதிர்பார்ப்பை மேலும் உயர்த்தியுள்ளது. 

மக்கள் தொடர்பு (PRO): ரேகா