3 நாட்களில் 25 கோடி வசூலித்த தலைவன் தலைவி
பாண்டிராஜ் இயக்கத்தில் விஜய் சேதுபதி நித்யா மேனன் நடித்த தலைவன் தலைவி திரைப்படம் கடந்த ஜூலை 25 ஆம் தேதி திரையரங்கில் வெளியானது. ஃபேமிலி ஆடியன்ஸிடம் பாசிட்டிவான விமர்சனங்களைப் பெற்ற இப்படம் வசூலில் கலக்கி வருகிறது. அந்த வகையில் தலைவன் தலைவி திரைப்படம் 3 நாட்களில் தமிழ் நாட்டில் மட்டுமே ரூ 25 கோடி வசூலித்துள்ளதாக படக்குழு அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகியுள்ளது.