Maamanithan trailer: “அப்பன் தோத்த ஊர்ல புள்ளைங்க ஜெயிக்கிறது சாதாரண விஷயம் கிடையாது” - வெளியானது மாமனிதன் ட்ரெய்லர்
2019-ஆம் ஆண்டே இந்த திரைப்படத்தின் படப்பிடிப்பு நிறைவடைந்து இருந்தாலும், படத்தின் வெளியீட்டு தேதி தொடர்ந்து தள்ளிபோய்க்கொண்டே இருந்தது.

சீனு ராமசாமி இயக்கத்தில் நான்காவது முறையாக விஜய் சேதுபதி நடித்துள்ள திரைப்படம் 'மாமனிதன்'. சீனு ராமசாமியுடன் தொடர்ந்து பணியாற்றி வரும் யுவன் ஷங்கர் ராஜா 'மாமனிதன்' திரைப்படத்தை தயாரித்துள்ளார். மேலும் முதன்முறையாக இசைஞானி இளையராஜாவும், யுவன் ஷங்கர் ராஜாவும் இணைந்து இந்த படத்திற்கு இசையமைத்துள்ளனர்.
இந்தப் படத்தில் ‘ஜோக்கர்’ திரைப்படத்தின் மூலம் கவனம் ஈர்த்த குருசோமசுந்தரம் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். 2019 ஆம் ஆண்டே இந்த திரைப்படத்தின் படப்பிடிப்பு நிறைவடைந்து இருந்தாலும், படத்தின் வெளியீட்டு தேதி தொடர்ந்து தள்ளிபோய் கொண்டே இருந்தது. இந்நிலையில், இன்று மாலை மாமனிதன் படத்தின் ட்ரெய்லர் வெளியாகி இருக்கிறது.
Just In




இந்த சூழலில் சில மாதங்களுக்கு முன்பு படத்தில் இடம்பெற்ற தட்டிப்புட்டா தட்டிப்புட்டா பாடல் வெளியாகி ரசிகர்களிடையே வரவேற்பை பெற்றது. மேலும் பாடல் சூப்பர் ஹிட் ஆனதால் படத்தின் மீதான எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது. இன்று ட்ரெய்லர் வெளியாகி இருக்கும் நிலையில், படம் வெளியிடப்படும் தேதி விரைவில் தெரிவிக்கப்படுமென தெரிகிறது.
மேலும், ஓடிடி இல்லாமல் திரையரங்குகளில் வெளியாகும் என்பது உறுதியாகி இருக்கிறது.
மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்
ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்