மனோஜ் பாய்பாய், ப்ரியாமணி, சமந்தா நடிப்பில் சில வாரங்களுக்கு முன்னால் 'தி பேமிலி மேன் சீசன் 2' வெளியானது. இதை இரட்டை இயக்குநர்கள் ராஜ் அண்ட் டிகே இயக்கியிருந்தார்கள். இந்தியில் மிகவும் பிரபலமானது இவர்களின் டைரக்ஷன். தெலுங்கில் சில படங்களுக்கு புரொடியூசராகவும் இவர்கள் இருந்து வருகின்றனர். 


 இந்த ட்ரெய்லர் வெளிவந்த நாளிலிருந்தே ஈழப் போராளிகளை தவறாக சித்தரித்துள்ளனர் என பலரும் தங்களை எதிர்ப்புகளை தெரிவித்திருந்தனர். மேலும், இந்த சீரிஸ் வெளியிடவும் கூடாது எனவும் தெரிவித்திருந்தனர். இந்நிலையில் இந்த சீரிஸ் வெளியாகி பல்வேறு தரப்பட்ட விமர்சனங்களை பெற்றது. 
 

இந்த சீரிஸில் ஈழப் போராளியாக நடிகை சமந்தா நடித்திருந்தார். இவரது நடிப்பை பொருத்தவரை எல்லோராலும் பாராட்டப்பட்டது. சமந்தாவின் சினிமா வாழ்க்கையில் இந்த சீரிஸ் ஒரு மைல்கல்லாக பார்க்கப்படுகிறது. சமந்தாவுக்கு இதில் ஆக்‌ஷன் சீக்வென்ஸ் காட்சிகளும் இருந்தது. வழக்கமான தன்னுடைய நடிப்பில் இருந்து மாறுபட்ட கேரக்டரில் சமந்தா நடித்திருந்தார்

 


 

இந்த வெப் சீரிஸின் ஈழத் தலைவராக மைம் கோபி நடித்திருந்தார். இவரது கேரக்டருக்கு முதலில் நடிக்க விஜய் சேதுபதியிடம் கேட்கப்பட்டதாகவும் இவர் மறுத்து விட்டதாகவும் தகவல்கள் வந்தன. மேலும், ராஜ் அண்ட் டிகே அடுத்து எடுக்கயிருக்கும் 'தி பேமிலி மேன் 3' வெப்சீரிஸில் விஜய் சேதுபதி முக்கியமான ரோலில் நடிக்க இருப்பதாகவும் தகவல்கள் வந்தன. இதுகுறித்து விசாரித்தபோது, 

 

'தி பேமிலி மேன் சீசன் 3' யில் விஜய் சேதுபதி நடிக்கவில்லை என கூறப்பட்டது. மேலும், ராஜ் அண்ட் டிகே எடுக்கயிருக்கும் வேறொரு புதிய சீரிஸில் விஜய் சேதுபதியை நடிக்க வைக்கவே பேச்சு வார்த்தை நடக்கிறது எனவும் சொல்லப்படுகிறது. சேதுபதிக்கு கதை பிடித்திருக்கும் பட்சத்தில் இவர் நடிப்பார் எனவும் எதிர்பார்க்கப்படுகிறது. இதுகுறித்து அதிகாரபூர்வமான தகவல்கள் எதுவும் இன்னும் வெளிவரவில்லை. 

 


 

தற்போது விஜய் சேதுபதியின் நடிப்பில் 'லாபம்' 'துக்ளக் தர்பார்' 'யாதும் ஊரோ யாவரும் கேளிர்' என பல படங்கள் ரிலீஸுக்கு உள்ளன. மேலும் லோகேஷ் கனகராஜ் நடிப்பில் 'விக்ரம்' படத்தில் அரசியல்வாதி கேரக்டரில் விஜய் சேதுபதி நடிக்க இருக்கிறார். தவிர இந்தியில் சில படங்களில் கமிட்டாகி இருக்கிறார் விஜய் சேதுபதி.