இன்று திரையரங்கில் வெளியாகியுள்ள 'ஏஸ்'

ஆறுமுக குமார் இப்படத்தை தயாரித்து இயக்கியுள்ள படம் ஏஸ்.  விஜய் சேதுபதி , ருக்மினி வசந்த் , யோகி பாபு ஆகியோர் இப்படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளார்கள்.  திவ்யா பிள்ளை, பப்லூ பிருத்வீராஜ், பி.எஸ். அவினாஷ், முத்துக்குமார், ராஜ் குமார், டெனெஸ் குமார், ஆல்வின் மார்ட்டின், பிரிசில்லா நாயர், ஜாஸ்பர் சுபயா, கார்த்திக் ஜே, நகுலன், ஜஹ்ரினாரிஸ் மற்றும் பலர் இப்படத்தில் நடித்துள்ளார்கள். சாம் சி.எஸ் பின்னணி இசையும் ஜஸ்டின் பிரபாகரன் இசையமைத்துள்ளார். மே 23 ஆம் தேதி இப்படம் திரையரங்கில் வெளியாக இருக்கிறது. ஏஸ் படத்திற்கு சமூக வலைதளங்களில் பாசிட்டிவான விமர்சனங்கள் வெளியாகி வந்துள்ளன. 

ஏஸ் பட விமர்சனம்

வழக்கமாக யூகிக்கக் கூடிய கதையாக இருந்தாலும் திரைக்கதை சுவாரஸ்யமாக அமைந்திருப்பதாகவும் யோகி பாபு மற்றும் விஜய் சேதுபதியின் காம்பினேஷ் சிறப்பாக வர்க் அவுட் ஆகியிருப்பதாக ஒரு விமர்சனம் வந்துள்ளது.

 மலேசியாவில் கொள்ளையடிப்பதை மையமாக நகரும் கதை அதில் பல சுவாரஸ்யமான திருப்பங்கள் என செல்கிறது ஏஸ் படத்தின் கதை. போல்ட் கண்ணன் என்கிற கதாபாத்திரத்தில் வரும் விஜய் சேதுபதி மிக சிறப்பாக நடித்துள்ளார். அவருக்கும் ருக்மினி வசந்திற்குமான காதல் காட்சிகள் அழகாக எழுதப்பட்டுள்ளன. படம் முழுவதும் வரும் ஒன் லைனர் காமெடிகள் நகைச்சுவையாக அமைந்துள்ளதாக மற்றொரு விமர்சனத்தில் குறிப்பிடப் பட்டுள்ளது. 

நீண்ட  நாட்களுக்குப் பின் யோகி பாபு முழுக்க முழுக்க காமெடி கதாபாத்திரத்தில் நடித்து அசத்தியிருக்கிறார். விஜய் சேதுபதி மற்றும் யோகி பாபு இடையிலான காமெடி காட்சிகள் பெரும்பாலும் வர்க் அவுட் ஆகியிருக்கின்றன. படத்தின் ஓப்பனிங் தொடங்கி இடைவேளை , க்ளைமேக்ஸ் என எல்லா பகுதிகளும் புதுமையான முறையில் கையாளப் பட்டிருக்கின்றன என மற்றொரு விமர்சனத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது.