இயக்குநர் வெற்றிமாறனின் அடுத்த படைப்பான 'விடுதலை'  திரைப்படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியானதில் இருந்து படத்தை பற்றிய பல யூகங்கள் அனைவருக்கும் இருந்தது. நடிகர் விஜய் சேதுபதி மற்றும் நடிகர் சூரி இதில் முக்கிய கதாபாத்திரம் ஏற்று நடிக்கின்றனர்.  தேசிய விருது பெற்ற இயக்குநர் வெற்றிமாறன் முற்றிலும் மாறுபட்ட களங்களில், தன் தனித்த முத்திரை கொண்ட படங்களினால் இந்திய அளவில் ரசிகர்களை கவர்ந்து புகழ்பெற்றவர்.  விடுதலை திரைப்படத்தில் நடிகர் சூரி கதை நாயகனாகவும், விஜய் சேதுபதி வாத்தியாராகவும் நடிக்கவுள்ளனர். இயக்குநர் வெற்றிமாறன் முதன்முறையாக இப்படத்தில் இசைஞானி இளையராஜாவுடன் இணைந்து பணியாற்றுகிறார்.





ஆரம்பத்தில் படத்தை தமிழில் மட்டுமே வெளியிட முடிவு செய்தனர் . பின்பு விஜய் சேதுபதிக்கு படத்தில் முக்கியமான கதாபாத்திரம் இருப்பதாலும், தற்பொழுது விஜய் சேதுபதி தெலுங்கு , ஹிந்தி மற்றும் மலையாளத்தில் அதிகமான படங்களில் நடித்து வருவதாலும், படத்தை தெலுங்கு , ஹிந்தி , மலையாளம் ,கன்னடம் போன்ற மொழிகளில் டப்பிங் செய்து வெளியிடப் போவதாக படக்குழு முடிவு செய்துள்ளது . 




இப்படத்தில் விஜய் சேதுபதி ஒரு நிஜ வாழ்க்கை கதாபாத்திரத்தை ஏற்று நடிக்கிறார்  என்று படக்குழுவினர் தெரிவித்துள்ளனர் . “80 களில் வாத்தியார் என்ற நபர் இருந்தார், அவர் தமிழ் தேசியம் குழுமத்தின் ஒரு பகுதியாக இருந்தார். அவர் ஒரு ஆசிரியராக  பல நல்ல செயல்களைச் செய்தார். இப்படத்தில் விஜய் சேதுபதி அந்த கதாபாத்திரத்தை ஏற்று நடிக்கிறார். உண்மையில், கதை அவரது கதாபாத்திரம் மற்றும் அவரது படைப்புகளைச் சுற்றி வருகிறது. விஜய் சேதுபதிக்கான அவரது தோற்றத்தை மீண்டும் உருவாக்க குழு முயற்சித்தது. இந்த படக்குழு  சமீபத்தில் சத்தியமங்கலம் மற்றும் செங்கல்பட்டு ஆகிய இடங்களில் படப்பிடிப்பு நடத்தி வந்தனர்  “செங்கல்பட்டில், அவர்கள் ஒரு பெரிய போலீஸ் முகாமை அமைத்து 20 நாட்களுக்கு மேல் படப்பிடிப்பு நடத்தி வந்தனர். கோவிட் -19 இரண்டாவது அலை பரவல் அதிகம்  வந்தவுடன், படப்பிடிப்பு நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது , கொரோனா தாக்கம் கம்மியான பின்பு அணி மீண்டும் சத்தியமங்கலத்திற்குச் சென்று கடைசி கட்ட படப்பிடிப்பை நடத்தி முடிக்கப்படும்” என்றும் தெரிகிறது.