இராமாயணத்தில் வரும் விபீசணன் கதாபாத்திரத்தில் நடிகர் விஜய் சேதுபதி நடிக்க இருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.


மீண்டும் படமாகும் இராமாயணம்


தங்கல் படத்தின் மூலம் இந்திய திரையுலகை அதிரவிட்ட இயக்குநர் நிதேஷ் திவாரி. தற்போது இராமாணத்தை மையமாக வைத்து ஒரு பிரம்மாண்டமான படத்தை எடுக்க இருப்பதாக தகவல்கள் வெளியாகி இருக்கின்றன. சமீப காலங்களில் இந்திய புராணக் கதைகளை மையமாக வைத்து உருவாகும் படங்களின் எண்ணிக்கை அதிகரித்து வருகின்றன. பிரபாஸ் நடித்து கடந்த ஆண்டு வெளியான ஆதிபுருஷ் திரைப்படம் ரசிகர்களின் எதிர்பார்ப்பை பூர்த்தி செய்ய தவிர்த்தது.


இதனைத் தொடர்ந்து பிரசாந்த் இயக்கத்தில் வெளியான அனுமன் படம் இராமாயணத்தில் வரும் அனுமன் கதாபாத்திரத்தை மையமாக வைத்து எடுக்கப் பட்டது. தற்போது நிதேஷ் திவாரி இராமாயணத்தை மையமாக வைத்து பிரம்மாண்டமான படம் ஒன்றை இயக்க இருப்பதாக தகவல்கள் வெளிவந்த வண்ணம் இருக்கின்றன.


படத்தில் இணைய இருக்கும் நடிகர்கள்


இந்தப் படத்தில் நடிகர் ரன்பீர் கபூர் ராமர் கதாபாத்திரத்தில் நடிக்க இருப்பதாகவும் நடிகை சாய் பல்லவி சீதையாக நடிக்க இருப்பதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன. ராவணன் கதாபாத்திரத்தில் கே.ஜி எஃப் புகழ் நடிகர் யாஷ் நடிக்க இருப்பதாக தகவல் வெளியாகியிருந்த நிலையில் நடிகர் யாஷ் இந்த தகவலை மறுத்திருந்தார். தற்போது யாஷ் ராவணனாக நடிக்க இருக்கும் தகவல் உறுதியாகியிருப்பதாக கூறப்படுகிறது. தமிழ் தெலுங்கு, இந்தி என பல்வேறு மொழிகளில் இருந்து  நடிகர்கள் இந்தப் படத்தை இணைக்கப்பட்டு வரும் நிலையில் தற்போது நடிகர் விஜய் சேதுபதி இந்தப் படத்தில் நடிக்க இருப்பதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன.


விபிஷணனாக விஜய் சேதுபதி






இயக்குநர் நிதேஷ் திவாரி விஜய் சேதுபதியை விபீசணன் கதாபாத்திரத்தில் நடிக்க அழைத்திருப்பதாக தற்போது சமூக வலைதளங்களில் தகவல்கள் பரவி வருகின்றன. இது குறித்த அதிகாரப்பூர்வ தகவல்கள் வெளிவர இன்னும் சில காலம் பிடிக்கலாம். அதே நேரத்தில் பாலிவுட் நடிகர் சன்னி தியோல் இந்தப் படத்தில் அனுமன் கதாபாத்திரத்தில் நடிக்க வாய்ப்புள்ளது. மேலும் நடிகர் பாபி தியோல் கும்பகரணன் கதாபாத்திரத்தில் நடிக்க மறுத்துவிட்டதாகவும் தெரியவந்துள்ளது.


விஜய் சேதுபதி நடித்து வரும் படங்கள்


 நடிகர் விஜய் சேதுபதி கத்ரீனா கஃப் நடித்து சமீபத்தில் வெளியான மெரி கிறிஸ்துமஸ் படம் நல்ல வரவேற்பைப் பெற்றது. விஜய் சேதுபதியின் 50 ஆவது படமாக உருவாகியுள்ள மஹாராஜா படம் ரிலீஸுக்கு தயான் நிலையில் உள்ளது. நிதில சாமிநாதன் இந்தப் படத்தை இயக்கியுள்ள  நிலையில் இயக்குநர் அனுராக் கஷ்யப் இந்தப் படத்தில் முக்கிய வில்லனாக நடித்துள்ளார்.