இயக்குநர் சி பிரேம்குமார் இயக்கத்தில், பள்ளி பருவ காதல் காட்சிகளை மையப்படுத்தி வெளியான படம் தான் 96. இந்தப் படத்தில் விஜய் சேதுபதி, த்ரிஷா, தேவதர்ஷினி, கௌரி கிஷன் ஆகியோர் பலர் நடித்திருந்தனர். ராமசந்திரன் (ராம்) என்கிற ரோலில் விஜய் சேதுபதி நடித்திருந்தார். பள்ளி பருவத்தில் மனதில் மலரும் முதல் காதலை பற்றியும், அதன் அழகிய நினைவை தூண்டுவதும் தான் இந்த படத்தின் கதைக்களம்.
இந்த படம் வெளியான போது, பலர் தங்களின் பள்ளி பருவத்திற்கே இந்த படம் அழைத்து சென்றதாக கூறியது மட்டும் இன்றி, ரீ-யூனியன் நிகழ்ச்சிகளிலும் நடத்தினர். இதுவே இந்த படத்தின் மகத்தான பார்க்கப்பட்டது. இப்படம் வெளியாகி சுமார் 7 வருடங்கள் ஆகும் நிலையில், இந்தப் படத்தில் முதலில் நடிக்க இருந்தது விஜய் சேதுபதி இல்லை என்கிற உண்மையை இயக்குனர் சி.பிரேம் குமார் கூறியுள்ளார்.

இது குறித்து அவர் கூறியிருப்பதாவது: முதலில் இந்தப் படத்தில் ராம் என்ற ரோலுக்கு தேர்வு செய்யப்பட்டவர் அபிஷேக் பச்சன். இந்தப் படத்தின் மூலமாக அவரை தமிழ் சினிமாவிற்கு கொண்டு வர முயற்சி செய்தேன். ஆனால் அவரை எப்படி தொடர்பு கொண்டு தமிழுக்கு கொண்டு வருவது என்பது குறித்து எனக்கு தெரியவில்லை. பின்னர் அந்த பிளானை டிராப் செய்துவிட்டு கடைசியில் விஜய் சேதுபதியை தேர்வு தேர்வு செய்தேன். படமும் மிகப் பெரியளவில் ஹிட் கொடுத்தது என கூறியுள்ளார்.
தமிழில் இந்தப் படத்திற்கு கிடைத்த வர்வேற்பைத் தொடர்ந்து தெலுங்கு, கன்னடம், மலையாளம் ஆகிய மொழிகளிலும் ரீ மேக் செய்யப்பட்டு இந்த படம் ஹிட் ஆனது. கொடுத்தது. இந்தப் படத்திற்கு கிடைத்த வரவேற்பைத் தொடர்ந்து 96 படத்தின் 2ஆம் பாகமும் உருவாகி வருகிறது. இதற்கான கதை தயாராக இருப்பதாக இயக்குனர் கூறியுள்ளார். ஒருவேளை அபிஷேக் பச்சன் இந்த படத்தில் நடித்திருந்தால், அவருக்கு தமிழில் இந்த படம் மிகப்பெரிய ஓப்பனிங் படமாக அமைந்திருக்கும் என்பதில் எந்த ஒரு மாற்று கருத்தும் இல்லை.