இயக்குனர் பொன்ராம் - நடிகர் விஜய் சேதுபதி, கூட்டணி சேரும் படத்தின் டைட்டில் மற்றும் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியாகி ரசிகர்களின் வரவேற்பை பெற்றுள்ளது. 


பான் இந்திய நடிகர் விஜய் சேதுபதி :


தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக வலம் வரும் நடிகர் விஜய் சேதுபதி பாலிவுட், மாலிவுட் திரையுலகிலும் தனது முத்திரையை பதித்து வருகிறார். ஹீரோவாக, வில்லனாக, துணை கதாபாத்திரமாக, சிறப்பு தோற்றம் என நடிப்பில் அனைத்து இடங்களையும் கைப்பற்றிய இந்த நடிகர் தற்போது மல்டி ஸ்டாரர் திரைப்படங்களாக தேர்வு செய்து நடித்து வருகிறார். 


 



விஜய் சேதுபதியின் டைட்டில் மற்றும் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் ரிலீஸ் :


வருத்தப்படாத வாலிபர் சங்கம், ரஜினி முருகன் உள்ளிட்ட படங்களை இயக்கியதன் மூலம் பிரபலமான இயக்குனர் பொன்ராம் இயக்கத்தில் நடிகர் விஜய் சேதுபதி ஒரு போலீஸ் அதிகாரியாக நடித்துவரும் திரைப்படம் 'டிஎஸ்பி'. இப்படத்தின் டைட்டில் மற்றும் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் நேற்று வெளியிடப்பட்டது. இந்த போஸ்டர் நடிகர் விஜய் சேதுபதி போலீஸ் காஸ்டியூம் அணிந்து, ஒரு ராயல் என்ஃபீல்டு பைக்கை ஓட்டி வருவது போன்ற போஸ்டரை வெளியிட்டுள்ளனர். 


ஸ்டோன் பெஞ்ச் நிறுவனத்தின் சார்பில் கார்த்திக் சுப்புராஜ் இப்படத்தை தயாரிக்கிறார். கார்த்திக் சுப்புராஜ் - விஜய் சேதுபதி கூட்டணி ஷார்ட் பிலிம் காலம் முதல் இணைந்து பணிபுரிந்து வருகிறார்கள். பீட்சா, இறைவி, பேட்ட, ஜிகர்தண்டா திரைப்படங்களுக்கு பிறகு மீண்டும் 'டிஎஸ்பி' திரைப்படம் மூலம் இணைகிறார்கள். இசையமைப்பாளர் இமான் இசையமைக்கும் இப்படத்தில் நடிகர் விஜய் சேதுபதியின் ஜோடியாக நடிக்கிறார் அனு கீர்த்தி 


 






 


ரொம்ப பிஸி :


இதற்கு முன்னர் நடிகர் விஜய் சேதுபதி போலீஸ் கதாபாத்திரத்தில் நடித்த 'செக்க சிவந்த வானம்' மற்றும் 'சேதுபதி' திரைப்படங்கள் வசூல் ரீதியாகவும் விமர்சன ரீதியாகவும் நல்ல வரவேற்பை பெற்றது என்பது குறிப்பிடத்தக்கது. நடிகர் விஜய் சேதுபதி 'டிஎஸ்பி' திரைப்படத்தோடு பல திரைப்படங்களில் நடித்து வருகிறார். நடிகர் ஷாருக்கான் நடிக்கும் 'ஜவான்'  திரைப்படத்தில் விஜய் சேதுபதி ஒரு முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கிறார். விடுதலை திரைப்படம் ரிலீசுக்கு தயாராக உள்ளது.  மேலும் காந்தி டாக்கீஸ், மும்பைக்கார், மெர்ரி கிறிஸ்துமஸ் உள்ளிட்ட படங்கள் விஜய் சேதுபதி நடிப்பில் வெளியாகவிருக்கும் திரைப்படங்களாகும்.