தமிழ் சினிமாவில் சாதாரண தோற்றத்தில் அறிமுக நடிகராக என்ட்ரி கொடுத்து இன்று உச்சபட்ச நடிகர்களில் ஒருவராக திகழ்பவர் நடிகர் விஜய் சேதுபதி. ஹீரோவாக மட்டுமே நடிக்காமல் வில்லனாக மிரட்டி குணச்சித்திர கதாபாத்திரங்களிலும், கெஸ்ட் ரோல்களிலும் வெரைட்டி காட்டி வருகிறார். தமிழ் மட்டுமின்றி தெலுங்கு, மலையாளம், ஹிந்தி என பல மொழிகளில் தனது பன்முக திறமைக்கு பெயர் போனவர். அவரின் 50வது படமான 'மகாராஜா' திரைப்படம் வெளியான மூன்றே நாட்களில் வசூலில் பின்னி பெடலெடுத்து வருகிறது. இந்த 'மகாராஜா' டீம் கடந்த வாரத்தில் பல நிகழ்ச்சிகளில் படத்தின் ப்ரோமோஷனுக்காக பங்கேற்று கலக்கி வருகிறார்கள். 


 



 


அந்த வகையில் மிகவும் பிஸியான ஷெட்யூலில் இருந்து வந்தாலும் விஜய் டிவியின் மிகவும் பிரபலமான ரியாலிட்டி ஷோ 'குக்கு வித் கோமாளி' சீசன் 5 நிகழ்ச்சியில் சிறப்பு விருந்தினராக விஜய் சேதுபதி கலந்து கொண்டார். ஏற்கனவே கலகலப்பாக இருக்கும் குக்கு வித் கோமாளி செட்டில் விஜய் சேதுபதி கலந்து கொண்ட பிறகு மேலும் ஸ்வாரஸ்யமாக இருந்தது. போட்டியாளர்கள், நடுவர்கள் முதல் கோமாளிகள் வரை அனைவருக்கும் ஒரே குதூகலமாக இருந்தது. எலும்புள்ள சிக்கன் சமைக்க வேண்டும். அதுதான் டாஸ்க். 



 


இந்நிலையில் போட்டியாளர்களில் ஒருவரான நடிகை சுஜிதாவுக்கு விஜய் சேதுபதி தன்னுடைய ஃபேவரட் சிக்கன் 65 ரெசிபி ஒன்றை பகிர்ந்து இருந்தார். இதை என்னோட மனைவி கிட்ட சொல்லி ஒரு முறை செய்ய சொன்னேன் அதை ட்ரை செய்து பாருங்க என்றார். 


 


பச்சை மிளகாய், சீரகம், கொத்தமல்லி, புதினா, இஞ்சி, பூண்டு போட்டு மிக்ஸியில் அறைந்த அதில் மஞ்சள் தூள், கரம் மசாலா, மிளகு தூள், தனியா  தூள், தயிர், அரிசி மாவு, எலுமிச்சை சாறு கலந்து ஒரு மணி நேரம் நன்றாக ஊறவைத்த பின்னர் சூடான எண்ணெயில் பொரித்து எடுத்தால் ஸ்டார் ஹோட்டல் ஸ்டைலில் சூப்பர் ஹிட் கிரீன் சிக்கன் 65 தயார். அதை ருசித்து பார்த்து அவர் ஸ்டார் மா என அழகாக பாராட்டினார்.  


 






 


நிகழ்ச்சியில் கலந்து கொண்ட சிறப்பு விருந்தினர் போல் அல்லாமல் மிகவும் அந்யோன்யமாக அனைவருடன் பழகி கடந்த வார எபிசோட்டை ஒரு படி மேல் எடுத்து சென்று ஸ்வாரஸ்யமாக்கியதை ரசிகர்கள் ரசித்தனர்.