மகாராஜா


நிதிலன் ஸ்வாமிநாதன் இயக்கத்தில் விஜய் சேதுபதியின் 50 ஆவது படமாக உருவான படம் மகாராஜா. கடந்த ஜூன் 15 ஆம் தேதி இப்படம் திரையரங்குகளில் வெளியானது. இப்படத்தில் மம்தா மோகன்தாஸ், அனுராக் காஷ்யப் , அபிராமி, முனீஷ்காந்த், நட்டி நட்ராஜ் , பாரதிராஜா,சச்சினா நெமிதாஸ் மற்றும் பலர் நடித்திருந்தனர். பி. அஜனீஷ் லோக்நாத் இசையமைத்துள்ளார்.


மகாராஜா படத்தில் ரசிகர்களை அதிகம் கவர்ந்த அம்சன் என்றால் படத்தின் திரைக்கதை. ஏற்கனவே பலமுறை படங்களில் பார்த்த கதை தான் என்றாலும் திரைக்கதையின் சுவாரஸ்யமே மகாராஜா படத்தை மிகப்பெரிய வெற்றிப்படமாக மாற்றியது. உலளவில் இப்படம் 105 கோடிகள் வசூல் ஈட்டியதைத் தொடர்ந்து கடந்த ஜூலை 12 ஆம் தேதி நெட்ஃப்ளிக்ஸில் வெளியாகியது.


இந்தி ரசிகர்களை கவர்ந்த மகாராஜா


தமிழ் ரசிகர்கள் மகாராஜா படத்தை கொண்டாடும் அளவிற்கு இந்தி பட ரசிகர்களும் மகாராஜா படத்தை பெரியளவில் பாராட்டி வருகிறார்கள். சமூக வலைதளத்தில் மகாராஜா படத்தின் காட்சிகள் , வசனங்களை குறிப்பிட்டு வீடியோக்களை பகிர்ந்து வருகிறார்கள் . இதற்கு முதல் காரணமாக படத்தில் அனுராக் கஷ்யம் வில்லனாக நடித்திருப்பதை குறிப்பிடலாம். அனுராக் கஷ்யப்  நடித்ததால் மட்டும் இப்படத்திற்கு இவ்வளவு பெரிய வரவேற்பு கிடைத்ததற்கான காரணமாக சொல்லிவிட முடியாது. சமீப காலத்தில் விஜய் சேதுபதிக்கு பாலிவுட் ரசிகர்கள் மத்தியில் கிடைத்திருக்கும் ஆதரவே மகாராஜா படத்தின் இவ்வளவு பெரிய வெற்றிக்கு காரணம். 






மகாராஜா படத்திற்கு முன்பாக ஷாருக் கான் நடித்த ஜவான் படத்தில் விஜய் சேதுபதி வில்லனாக நடித்திருந்தார். இதனைத் தொடர்ந்து ஷாஹித் கபூர் உடன் இணைந்து ஃபார்ஸி வெப் சீரீஸூம் சிறப்பான வெற்றிபெற்றது. இதனைத் தொடர்ந்து ஸ்ரீராம் ராகவன் இயக்கத்தில் கர்தீனா கைஃப் உடன் விஜய் சேதுபதி இணைந்து நடித்த மெரி கிறிஸ்துமஸ் படமும் பெரியளவில் வெற்றிபெற்றது. இந்த மூன்று படங்கள் பாலிவுட்டில் விஜய் சேதுபதியின் மார்கெட்டை பெரியளவில் அதிகரித்துள்ளன.


தற்போது மகாராஜா படத்தை ஓடிடியில் பார்த்து கொண்டாடும் பலர் விஜய் சேதுபதியின் நடிப்பை பாராட்டி வருகிறார்கள். தமிழில் கமல் , ரஜினிகாந்துக்கு அடுத்தபடியாக இந்தி மார்கெட்டை தனுஷ் ஓரளவிற்கு கைப்பற்றினார். இவர்களுக்கு பிறகு தற்பொது மகாராஜா படத்தின் வெற்றிக்குப் பின்  விஜய் சேதுபதி பாலிவுட்டில் அடுத்தடுத்த படங்களில் நடிப்பார் என்று எதிர்பார்க்கலாம்