முதல் பாகத்தில் சூரி ஹீரோவாக தெரிந்தார். ஆனால் இரண்டாம் பாகத்தில், சூரியை ஹீரோ என கூறியதற்கு பதில் விஜய் சேதுபதியை ஹீரோ என டைட்டில் கார்டில் போட்டிருக்கலாம். காரணம் வாத்தியார் தான் விடுதலை 2-ஆம் பாகம் முழுவதையும் ஆக்கிரமித்தார்.
விடுதலை 2 பிளஸ்:
விடுதலை இரண்டாம் பாகத்தில், மிக பெரிய பிளஸ் என்றால் அது நடிகர்களின் நடிப்பு. சூரி, விஜய் சேதுபதியில் துவங்கி, இந்த படத்தில் நடித்திருந்த ஒவ்வொருவரும் தங்களின் கதாபாத்திரத்தின் தன்மையை உள்வாங்கி நடித்திருந்தனர். அதே போல் விஜய் சேதுபதி தன்னுடைய வழக்கமான நடிப்பு பாணியில் இருந்து வெளியேறி இந்த படத்தில் வித்தியாசமான நடிப்பை வெளிப்படுத்தி இருந்தார். அங்கங்கு அவரின் நக்கல் சில இடங்களில் வெளிப்பட்டாலும், வாத்தியார் கெட்டப்புக்கு ஏற்ற மூர்க்கமும், கதாபாத்திரத்திக்காக தரமும் இருந்தது.
சூரிக்கு முக்கியத்துவம் இல்லையா?
அதற்காக, சூரியை வெற்றிமாறன் டம்மி பாப்பாவாக மாற்றிவிடவில்லை. விஜய் சேதுபதியுடன் ஒப்பிடும் போது மட்டுமே, சூரிக்கு கொடுத்த முக்கியத்தும் குறைவு. சூரி கிளைமேக்சில் பண்ணும் சம்பவங்கள் எல்லாம் தரம். அதே போல் படம் முழுவதும் தன்னுடைய சீரான நடிப்பை வெளிப்படுத்தியது சூரியை உற்று நோக்க வைத்தது. முதல் பாதி மிகவும் பொறுமையாக செல்வதால், விறுவிறுப்பை நம்பி வெற்றிமாறன் படத்திற்கு வந்த ரசிகர்கள் ஏமார்ந்து போனார்கள். முதல் பாதி நொண்டியடித்தாலும், இரண்டாவது பாதி வேகமாக நகர்கிறது.
வெற்றிமாறன் மேஜிக்:
ஒரே கதையை விஜய் சேதுபதி போலீஸ்கிட்ட சொல்வது போன்றும், அதே கதையா சூரி அவங்க அம்மாக்கு லெட்டர்ல எழுதுற மாதிரியும் வெற்றிமாறன் லிங்க் செய்துள்ளது படத்திற்கு பலம் சேர்த்துள்ளது. மற்றபடி முதல் பாகத்தில் இருந்த பல விஷயங்கள் இரண்டாம் பாதித்தால் மிஸ் ஆவதாக ரசிகர்கள் உணருகிறார்கள். ஜிவியின் இசை படத்திற்கு கை கொடுத்துள்ளது. பாடல்கள் தனியாக கேட்டால் நன்றாக இருந்தாலும், படத்துடன் பார்க்கும் போது இந்த இடத்தில் இப்படி ஒரு பாடல் தேவையா என ரசிகர்களை யோசிக்க வைத்துள்ளது.
வெற்றிமாறனின் மேஜிக் 'விடுதலை 2' படத்தில் கொஞ்சம் ஓவராகவே சொதப்பி விட்டதாக நெட்டிசன்கள் விமசித்து வருவதால், 'விடுதலை 2' வெற்றிமாறனுக்கு முதல் தோல்வியை கொடுக்குமா? என்கிற அச்சம் எழுகிறது. விமர்சனங்களை தாண்டி வெற்றிபெற்ற படங்களின் லிஸ்டில் 'விடுதலை 2' இணையுமா வெயிட் பண்ணி பார்ப்போம்.