விடுதலை பார்ட் 2:

இயக்குனர், வெற்றிமாறன் இயக்கத்தில் இன்று வெளியான திரைப்படம் 'விடுதலை 2' இந்த படத்தில், சூரி கதாநாயகனாக நடிக்க, விஜய் சேதுபதி, மஞ்சு வாரியர், உள்ளிட்ட மிகப்பெரிய நட்சத்திர பட்டாளம் நடித்திருந்தது. இன்று வெளியான இந்த படம் ஒரு தரப்பினர் மத்தியில் பாசிட்டிவ் விமர்சனத்தை பெற்றாலும், இன்னொரு தரப்பினர் 'விடுதலை 2' முதல் பாகம் அளவுக்கு இல்லை என்றும் ஏமாற்றமே எஞ்சியுள்ளது என கூறி வருகிறார்கள். கலவையான விமர்சனங்களை பெற்று வரும் இந்த படம் தமிழகம் முழுவதும் 1000திற்கும் மேற்பட்ட திரையரங்குகளில் வெளியாகி உள்ளது. சரி இந்த படத்துக்கு போட்டியாக வெளியான மற்ற படங்களை பற்றி பார்ப்போம்.

Continues below advertisement

இரு மனசு:

சிறிய படுஜெட்டில் காதலை மையமாக வைத்து இயக்குனர் முருகேசன் என்பவர் இயக்கி இருந்த திரைப்படம் தான் இரு மனசு.  கிராமத்தில் நடக்கும் சம்பவங்களை பேசியுள்ள இந்த திரைப்படம் பெரிய ஸ்டார் காஸ்டிங் இல்லாததாலும், 'விடுதலை 2' படத்துடன் வெளியாவதால் சில திரையரங்குகளில் மட்டுமே வெளியாகி பெரிதாக கவனிக்கப்படவில்லை. 

முஃபாசா:

இந்த கிருஸ்துமஸ் பண்டிகையை குழந்தைகளுடன் கொண்டாட வந்துள்ளது 'முஃபாசா த லயன் கிங்' சிங்கத்தின் குடும்பத்தை மையப்படுத்திய ஒரு 3டி அனிமேஷன் திரைப்படம். த லயன் கிங் படத்தின் தொடர்ச்சியாக வெளியாகியுள்ள இந்த படத்தில்,  தமிழ் நடித்தார்கள் பலர் சிங்கத்திற்கு குரல் கொடுத்துள்ளனர். தமிழகத்தில் இன்னும் பெரிதாக இந்த படம் கவனம் பெறாவிட்டாலும், பாலிவுட் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று வருகிறது.

Continues below advertisement

ஐயப்பன் துணை இருப்பான்:

பல வருடங்களாக கார்த்திகை மற்றும் மார்கழி மாதங்களை குறிவைத்து வெளியாகும் பக்தி படங்கள் குறைந்த நிலையில், அந்த இடத்தை நிரப்பும் விதமாக, இந்த ஆண்டு தமிழில் வெளியாகியுள்ள திரைப்படம் தான் ஐயப்பன் துணை இருப்பான். சிறிய பட்ஜெட்டில் எடுக்கப்பட்டுள்ள இந்த படத்தில், முழுக்க முழுக்க புதுமுக நடிகர்கள் மட்டுமே நடித்துள்ளனர். இந்த படம் குறிப்பிட்ட சில திரையரங்குகளில் மட்டுமே வெளியாகி உள்ளது.

UI:

கன்னட சூப்பர் ஸ்டார் உப்பேந்திரா நடிப்பில் 100 கோடி பட்ஜெட்டில் வெளியாகியுள்ள திரைப்படம் தான் UI. dystopian science fictional திரைப்படமாக இப்படம் உருவாகியுள்ளது. இந்த படத்தில் சன்னி லியோன் முதல் கொண்டு பல நடிகர்கள் நடித்துள்ளனர். காந்தாரா படத்திற்கு பின்னர், கன்னடத்தில் இருந்து தமிழகத்தில் தரமான வசூலை அள்ளும் என்கிற நம்பிக்கையோடு இந்த படம் ரிலீஸ் ஆகியுள்ளது. ஆனால் நெகட்டிவ் விமர்சனங்கள் கிடைத்து வருவதால், ஒரு வாரம் திரையரங்கில் தாக்கு பிடிப்பதே அதிசயம் என்பதே, விமர்சகர்களின் கருத்து.