தமிழ் சினிமாவின் முன்னணி நடிகரான விஜய், நடிகர் ரஜினிகாந்த் மற்றும் கமல்ஹாசனை காட்டிலும் அதிகப்படியான சம்பளம் வாங்குகிறார். ஏ.ஜி.எஸ் நிறுவனத்தின் கீழ் கல்பாத்தி.எஸ்.அகோரம் தயாரிப்பில் வெங்கட் பிரபு இயக்கத்தில் நடிகர் விஜய் நடித்துள்ள திரைப்படம் 'தி கிரேட்டஸ்ட் ஆஃப் ஆல் டைம்'. இப்படத்துக்கு நடிகர் விஜய்க்கு வழங்கப்பட்ட சம்பளம் குறித்த தகவலை தெரிவித்துள்ளார் தயாரிப்பாளர் அர்ச்சனா கல்பாத்தி.
மிகுந்த எதிர்பார்ப்புக்கு மத்தியில் செப்டம்பர் 5-ஆம் தேதி வெளியான இருக்கும் 'தி கோட்' திரைப்படத்தில் பிரஷாந்த், பிரபுதேவா, அஜ்மல், வைபவ், சினேகா, மோகன், ஜெயராம், மீனாட்சி சவுத்ரி, பிரேம்ஜி உள்ளிட்ட ஏராளமானோர் நடித்துள்ளனர். யுவன் ஷங்கர் ராஜா இப்படத்துக்கு இசையமைத்துள்ளார்.
இந்நிலையில் 'தி கோட்' படத்துக்காக நடிகர் விஜய்க்கு வழங்கப்பட்ட சம்பளம் குறித்து கேள்வி கேட்கப்பட்டது. தற்போதைய சூழல் படி அதிக சம்பளம் வாங்கும் கோலிவுட் நடிகராக பீக்கில் இருப்பவர் நடிகர் விஜய். தி கோட் படத்தை தயாரித்த அதே ஏ.ஜி.எஸ் நிறுவனம் தான் அட்லீ இயக்கத்தில் விஜய் நடிப்பில் வெளியான 'பிகில்' படத்தையும் தயாரித்து இருந்தனர். பிகில் படத்தின் ஒட்டுமொத்த பட்ஜெட்டே தற்போது இந்த படத்திற்காக விஜய் வாங்கிய சம்பளத்தை காட்டிலும் குறைவாகவே இருந்தது. அதற்கு என்ன காரணம்?
"தற்போதைய மார்க்கெட் மிக பயங்கரமாக பெரிதாகிவிட்டது. பிகில் படம் எடுக்கும் போது இருந்த நடிகர் விஜய் மார்க்கெட்டுக்கும் தற்போதைய மார்க்கெட்டும் ஐந்து வருட இடைவெளியில் பல மடங்கு உயர்ந்துவிட்டது. ஆந்திரா, கர்நாடகா, கேரளா, வட இந்தியா, தமிழ்நாடு மற்றும் வெளிநாடு என அணைத்து இடங்களிலும் நல்ல வளர்ச்சி அடைந்துள்ளது. அதனால் தான் நடிகர் விஜய்யுடன் படங்கள் செய்வதில் மிகவும் ஆர்வமாக இருக்கிறோம்.
அதனால் தான் படத்தின் தயாரிப்புக்காக மேலும் ஒரு 200 கோடி போட்டு எடுக்க முடிகிறது. ஜி.எஸ்.டி சேர்த்து கிட்டத்தட்ட தி கோட் படத்திற்காக 400 கோடி போட்டு இருக்கோம். அப்படி போட்டும் எங்களுக்கு அதில் லாபம் கிடைத்துள்ளது. அந்த அளவுக்கு மார்க்கெட் வளர்ச்சி அடைந்துள்ளது, எதிர்பார்ப்பும் பயங்கரமாக உள்ளது. அதனால் தான் என்னுடன் சேர்த்து வெங்கட் பிரபு முதல் யுவன் ஷங்கர் ராஜா என அனைவரும் அந்த அழுத்தத்தை உணர்கிறோம்.
ரசிகர்களுடைய எதிர்பார்ப்பை பூர்த்தி செய்ய வேண்டும் அதற்கு பக்காவான ஒரு ஸ்கிரிப்ட் வேண்டும். நடிகர் விஜய் போல ஒரு நேர்மையான கடின உழைப்பாளியை பார்க்கவே முடியாது. அவரை நம்பி தைரியமாக ஒரு ப்ராஜெக்ட்டில் இறங்கலாம்" என பேசி இருந்தார்.