தி கோட்


வெங்கட் பிரபு இயக்கத்தில் விஜய் நடித்துள்ள தி கோட் படம் நாளை செப்டம்பர் 9 ஆம் தேதி வெளியாக இருக்கிறது. பிரபுதேவா , பிரசாந்த் , மீனாக்‌ஷி செளதரி , லைலா , சினேகா , பிரேம்ஜி , ஜெயராம் உள்ளிட்டவர்கள் இப்படத்தில் நடித்துள்ளார்கள். யுவன் ஷங்கர் ராஜா இப்படத்திற்கு இசையமைத்துள்ளார். ஏ.ஜி,எஸ் என்டர்டெயின்மெண்ட் இப்படத்தை தயாரித்துள்ளது. உலகளவில் 5000 திரையரங்குகளில் இப்படம் வெளியாக இருக்கிறது. 


தி கோட் படத்திற்கான முன்பதிவுகள் கடந்த சில நாட்களில் தொடங்கியது. தற்போது படத்திற்கான முதல் நான்கு நாட்களுக்கான காட்சிகள் ஹவுஸ் ஃபுல் ஆகியுள்ளன. தற்போது இப்படத்திற்கான சிறப்பு காட்சிகளுக்கு தமிழக அரசு அனுமதி வழங்கியுள்ளது. இதன்படி செப்டம்பர் 5 மற்றும் 6 ஆம் தேதி காலை 9 மணிக்கு முதல் காட்சிகள் தொடங்க இருக்கின்றன. 






தி கோட் படம் வெளியாக இன்னும் சில மணி நேரங்களே இருக்கும் நிலையில் படத்தின் ரிலீஸ் ப்ரோமோ வீடியோவை படக்குழு வெளியிட்டுள்ளது.  படக்குழு சார்பாக வெளியாக கடைசி ப்ரோமோஷனல் வீடியோ இது. இனி நாளை முதல் தி கோட் படத்தின் விமர்சனங்கள் வெளியாக தொடங்கும்