தி கோட் 


விஜயின் 68 ஆவது திரைப்படமாக உருவாகி கடந்த செப்டம்பர் 5 ஆம் தேதி வெளியானது தி கோட். இரட்டை வேடங்களில் விஜய் , 90ஸ் பிரபல நடிகர்களான பிரபுதேவா , பிரஷாந்த் , சினேகா , லைலா , மோகன் உள்ளிட்டவர்கள் இப்படத்தில் நடித்திருந்தார்கள். யுவன் ஷங்கர் ராஜா இசையமைத்துள்ளார். 


விஜயின் சம்பளத்துடன் சேர்த்து தி கோட் படத்தின் மொத்த பட்ஜெட் 400 கோடி . இப்படத்தின் பட்ஜெட்டை கேள்விபட்டவர்கள் இவ்வளவு ரிஸ்ட் எடுக்கனுமா என்கிற கேள்வியை ரிலீஸூக்கு முன்  எழுப்பினார்கள். விஜய்க்கு இருக்கும் மார்கெட்டிற்காகவே இவ்வளவு பெரிய ரிஸ்கை நம்பி எடுக்கலாம் என படத்தின் தயாரிப்பாளர் அர்ச்சனா கல்பாத்தி தெரிவித்தார் . அதற்கேற்றபடியே படம் ரிலீஸாவதற்கு முன்பே ஓடிடி மற்றும் சேட்டலைட் விற்பனை போட்ட பணத்தில் 70 சதவீதம் திருப்பி எடுத்துவிட்டது. 


தி கோட் பாக்ஸ் ஆபிஸ்


திரையரங்கில் வெளியாகிய முதல் நாளே ரூ 126 கோடி வசூலித்தது தி கோட். இந்தியளவில் மட்டும் இப்படம் முதல் நாளில் 44 கோடு வசூலித்தது. படத்திற்கு கலவையான விமர்சனங்கள் வந்தாலும் அது வசூலில் எந்த விதமான பாதிப்பையும் ஏற்படுத்தவில்லை. ஓடிடியில் வெளியானப் பின்னும் திரையரங்கில் சில நாட்கள் படம் ஓடியது. இதுவரை தி கோட் திரைப்படம் உலகளவில் 455 கோடி வரை வசூல் செய்துள்ளது. இந்த தகவலை பட தயாரிப்பு நிறுவனம் அதிகாரப்பூர்வமாக வெளியிட்டுள்ளது. 


கேக் வெட்டிக் கொண்டாடிய விஜய்






தற்போது தி கோட் படம் தமிழ்நாட்டில் மட்டுமே திரையரங்கத்திற்கு சேர வேண்டிய பங்கீட்டு தொகையாகவே 100 கோடி வசூலித்துள்ளது. இதனை கொண்டாடும் விதமாக படத்தின் தயாரிப்பாளர் அர்ச்சனா கல்பாத்தி மற்றும் நடிகர் விஜய் கேக் வெட்டி ஒருவருக்கு ஒருவர் பகிர்ந்துகொண்டார்கள். இந்த வீடியோவை தயாரிப்பு நிறுவனம் தங்களது எக்ஸ் பக்கத்தில் வெளியிட்டுள்ளது. தி கோட் படத்தால் திரையரங்குகளுக்கு பெரிதாக லாபமில்லை என பல கருத்துக்கள் இணையத்தில் உலாவந்த நிலையில் அதை எல்லாம் மறுக்கும் விதமாக இந்த வீடியோவை படக்குழு பகிர்ந்துள்ளது