ArabicKuthu Breaks Kalavathi Record: 10 மணி நேரத்தில் மகேஷ் பாபுவின் சாதனையை முறியடித்த விஜய்... எப்படி தெரியுமா.. முழுவிவரம் உள்ளே..!

மகேஷ்பாபுவின் கலாவதி பாடலின் சாதனையை பீஸ்ட் படத்தின அரபிக்குத்து பாடல் முறியடித்துள்ளது.

Continues below advertisement

விஜய் நடிப்பில் உருவாகியுள்ள அரபிக்குத்து பாடல் நேற்று வெளியானது. பாடலின் வரிகளை சிவகார்த்திகேயன் எழுத அனிருத் மற்றும் ஜொனிதா காந்தி ஆகிய இருவரும் இணைந்து பாடியிருக்கின்றனர். மிகப்பெரிய எதிர்பார்ப்பை ஏற்படுத்தியிருந்த இந்தப்பாடல், வெளியான 10 மணி நேரத்தில் 16 மில்லியன் பார்வையாளகளை கடந்தது.

Continues below advertisement

 

அண்மையில் தெலுங்கில் பிரபல நடிகராக வலம் வரும் மகேஷ் பாபு  நடித்த  ‘சர்க்காரு வரி பாட்ட’ படத்தின் முதல் பாடலான கலாவதி பாடல் 24 மணி நேரத்தில் 16 மில்லியன் பார்வையாளர்களை கடந்திருந்த நிலையில், அந்த சாதனையை அரபிக்குத்து பாடல் 10 மணி நேரத்தில் முறியடித்துள்ளது.

 

இதுமட்டுமன்றி  தற்போது வரை அரபிக்குத்து பாடல் 26 மில்லியன் பார்வையாளர்களை தாண்டி சென்று கொண்டிருக்கிறது. இதுமட்டுமல்ல, ஒரே நாளில் அதிக பார்வையாளர்கள் பார்த்த லிரிக்கல் வீடியோ என்ற சாதனையையும் அரபிக்குத்து பாடல் படைத்திருக்கிறது. முன்னதாக விஜய்யின் மெர்சல் படத்தில் இடம்பெற்ற, ஆளப்போறான் தமிழன் பாடலை 154 மில்லியன் பார்வையாளர்கள் பார்த்திருந்தனர்.  

ஏப்ரல் மாதம், திரையரங்குகளில் பீஸ்ட் படம் வெளியாகும் என்பது உறுதியாகிவிட்ட நிலையில், ரிலீஸ் தேதி என்ன என்பது குறித்து இன்னும் அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகவில்லை. கதாநாயகியாக பூஜா ஹெக்டேவும் முக்கிய கதாபாத்திரத்தில் செல்வராகவனும் நடிக்கின்றனர். யோகிபாபு, வி.டி.வி. கணேஷ், ரெடின் கிங்ஸ்லி நகைச்சுவை கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். தொடர்ந்து, அபர்ணா தாஸ், ஜான் விஜய், டான்சிங் ரோஸ் புகழ் நடிகர் உள்பட ஏராளமான பட்டாளமே நடித்துள்ளனர்.

 

தமிழ் புத்தாண்டு பண்டிகையை அடுத்து ஏப்ரல் 14-ம் தேதி வெளியாகும் என எதிர்ப்பார்க்கப்படுகிறது. எனினும், ஏப்ரல் 14-ம் தேதியா அல்லது 28-ம் தேதியா என்பது உறுதியாகவில்லை. படம் வெளியாவதற்கு தயாராகி வருவதால், ப்ரொமோஷன் பணிகளும் முழு வீச்சில் தொடங்கப்பட்டுள்ளது. படத்தின் அரபிக் பாடலை தொடர்ந்து டீசர் விரைவில் வெளியாகும் என ரசிகர்கள் எதிர்ப்பார்த்துள்ளனர். இதனால், படக்குழு அடுத்தடுத்து அப்டேட்டுகளை அறிவிக்க உள்ளது. 

Continues below advertisement
Sponsored Links by Taboola