தென்னிந்திய சினிமாவின் முக்கிய நடிகராக பார்க்கப்படுபவர் நடிகர் விஜய். இவருக்கு ஏராளமான ரசிகர்கள் உண்டு. குறிப்பாக பல குழந்தைகளின் ஃபேவரெட்டாகவும் இருந்து வருகிறார். அவ்வபோது தனது குட்டி ஃபேன்ஸையும் சந்தித்து வருகிறார். இந்நிலையில் விபத்தில் சிக்கிய சிறுவனுக்கு விஜய் படத்தினை போட்டுக்காட்டி சிகிச்சை வழங்கப்பட்ட சம்பவம் சமீபத்தில் வைரலாக பரவியது. இந்நிலையில் அந்த சிறுவனை விஜய் சந்திக்க உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
இரவு நேரத்தில் இரு சக்கர வாகனத்தில் பின் இருக்கையில் அமர்ந்து பயணம் செய்த 10 வயது சிறுவன் ஒருவர் தூக்க கலக்கத்தில் நிலைத்தடுமாறி சாலையில் விழுந்ததாக கூறப்படுகிறது. இதனையடுத்து வாகனத்தை ஓட்டிச்சென்ற சிறுவனின் மாமா , அவரை அருகில் உள்ள ராயப்பேட்டை அரசு மருத்துவமனைக்கு அழைந்த்துச்சென்றுள்ளார். கண்களுக்கு கீழே மற்றும் நெற்றிப்பகுதியில் பலத்த காயம் ஏற்பட்ட நிலையில், அதிக இரத்தம் வெளியாகியுள்ளது. இதனால் வலியில் துடித்துள்ளார் சிறுவன் . உடனடி சிகிச்சையில் ஈடுபட்ட மருத்துவர்களுக்கு சிறுவன் அழுதுக்கொண்டே ஒத்துழைப்பு கொடுக்க மறுத்ததாக தெரிகிறது. உடனே சிறுவனிடம் கனிவாக பேசிய தன்னார்வலர் ஜின்னா என்பவர் , உங்களுக்கு பிடித்த நடிகர் யார் என கேட்க , சிறுவன் “ விஜய்” என பதிலளித்துள்ளார். மேலும் தனக்கு விஜய் வசனங்கள், பாடல்கள் அனைத்து தெரியும் என வலியிலும் விஜய் குறித்து ஆர்வமாக பேசியதால் , சிறுவன் விஜயின் தீவிர ரசிகர் என மருத்துவர்கள் அறிந்துக்கொண்டனர்.
இந்நிலையில் விஜய் விரைவில் அந்த குட்டி ஃபேனை சந்திக்க உள்ளாராம். மேலும் சாதூர்யமாக பேசி சிகிச்சை வழங்கிய தன்னார்வலர் மற்றும் மருத்துவர்களையும் சந்தித்து வாழ்த்துக்களை தெரிவிக்க இருப்பதாகவும் கூறப்படுகிறது. இதனை கேள்விப்பட்ட அவரது ரசிகர்கள் விஜய் எப்போதுமே தனது ரசிகர்களுக்கு முக்கியத்துவம் கொடுப்பவர் என கொண்டாடி வருகின்றனர்.