விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பான கலக்கப்போவது யாரு, சிரிச்சா போச்சு, அது இது எது போன்ற நிகழ்ச்சிகள் மூலமாக ரசிகர்களை சிரிக்க வைத்தவர் நாஞ்சில் விஜயன். பல நிகழ்ச்சிகளில் பெண் கதாபாத்திரமும் போட்டு ரசிகர்களை சந்தோஷத்தில் ஆழ்த்தியிருக்கிறார். நாஞ்சில் விஜயன் கடந்த 2023 ஆம் ஆண்டு மரியா என்பவரை திருமணம் செய்து கொண்டார்.
திருமணத்திற்கு பிறகு மனைவியுடன் இணைந்து ரீல்ஸ் போட்டும் அசத்தியிருக்கிறார். திருமணம் நடந்து ஒருவருடம் கடந்த நிலையில் இப்போது தான் அவர்களுக்கு பெண் குழந்தை பிறந்திருக்கிறது. ஒரு வருடங்களாக குழந்தை இல்லையா குழந்தை இல்லையா என்று பலரும் கேட்டு கேட்டு எங்களை கஷ்டப்படுத்தினார்கள் என்று இருவருமே பல நிகழ்ச்சிகளில் பேசியிருக்கிறார்கள்.
இந்த நிலையில் தான் சில மாதங்களுக்கு முன்பு நாஞ்சில் விஜயன் மனைவி கர்ப்பமாக இருக்கும் தகவலை சமூக வலைதளங்களில் பதிவிட்டார். அதற்கு வாழ்த்துக்கள் குவிந்த நிலையில் ஒரூ வருடத்திற்கு பிறகு கிடைத்த சந்தோஷம், மகிழ்ச்சி என்று கூறியிருக்கிறார்.
மரியா கர்ப்பமாக இருக்கும் புகைப்படங்களை சமூக வலைதளங்களில் பதிவிட்டு வந்துள்ளார். இவ்வளவு ஏன்நேற்று கூட புதிய உறவுக்காக நாங்கள் காத்திருக்கிறோம் என்று மருத்துவனையில் இருந்தபடி பதிவிட்டுருந்தனர். இந்த நிலையில் இன்று சித்ரா பௌர்ணமி நாளில் நாஞ்சியன் விஜயனுக்கு பெண் குழந்தை பிறந்துள்ளது என்று கூறியுள்ளார். மேலும், சித்திரை முழு நிலவு நாளான இன்று புதிதாக ஒரு உயிர் பிறந்துள்ளது. இனிமே நீ தான் எங்களுக்கு உலகம் என்று அறிவித்துள்ளனர். இதை தொடர்ந்து இவர்களுக்கு வாழ்த்துக்கள் குவிந்தவண்ணம் உள்ளது.