லோகேஷ் கனகராஜ்


மாநகரம் படத்தில் தனது இயக்குநர் பயணத்தைத் தொடங்கிய லோகேஷ் கனகராஜ், கைதி, மாஸ்டர், விக்ரம் என அடுத்தடுத்த தனது எல்லையை பிரம்மாண்டமானதாக மாற்றி வந்திருக்கிறார். தற்போது அவர் இயக்கியிருக்கும் லியோ திரைப்படம் இந்திய அளவில் அதிக எதிர்பார்க்கப்படும் படங்களில் ஒன்றாக இருக்கிறது.


கடந்த அக்டோபர் 5 ஆம் தேதி வெளியான லியோ படத்தின் ட்ரெய்லர் இந்த எதிர்பார்ப்பை இன்னும் பல மடங்கு அதிகரித்துள்ளது. வருகின்ற அக்டோபர் 19 ஆம் தேதி லியோ திரைப்படம் வெளியாக இருக்கும் நிலையில் லியோ படம் குறித்து முதல் முறையாக தனியார் செய்தி நிறுவனத்திற்கு அளித்த நேர்காணல் ஒன்றில் மனம் திறந்துள்ளார் லோகேஷ் கனகராஜ். இந்த நேர்காணலில் அவரிடம் கேட்கப்பட்ட சில கேள்விகளைப் பார்க்கலாம் .


ட்ரெய்லரை முதலில் விஜய் அன்னாவிடம் காட்டினேன்


லியோ திரைப்படத்தின் ட்ரெய்லர் ரசிகர்களிடம்  மிகப்பெரிய வரவேற்பைப் பெற்றுள்ளது. இந்த ட்ரெய்லரை முதல் முதலில் லோகேஷ் கனகராஜ் யாரிடம் காட்டியிருப்பார் என்பது நம் அனைவருக்கும் தெரியும். இதற்கு பதிலளித்த லோகி  “அதில் என்ன சந்தேகம்…ட்ரெய்லர் ரெடியானதும் முதலில் நேராக விஜய் அண்ணாவிடம் தான் காட்டினே அவர் மூன்று முறை அதை பார்த்தார். அவருக்கு ட்ரெய்லர் ரொம்பப் பிடித்திருந்தது. நாங்கள் ஒரு படம் எடுத்திருக்கிறோம் அதில் என்ன கதை இருக்கிறது எந்த மாதிரியான விஷயங்களை ரசிகர்கள் எதிர்பார்க்கலாம் என்பதை ட்ரெய்லரில் மக்களுக்கு தெரியப்படுத்த வேண்டும் என்பது என்னுடைய நோக்கமாக இருந்தது. லியோ படம் 2 மணி நேரம் 43 நிமிடங்கள் நீளம். அதே போல் இந்த ட்ரெய்லரும் 2 நிமிடம் 42 நொடிகளுக்கு இருக்க வேண்டும் என முடிவு செய்தோம்.


எனக்கும் விஜய் அன்னாவுக்கு சண்டை


பல்வேறு சுவாரசியமான நிகழ்வுகள் லியோ படப்பிடிப்பின் போது நடந்துள்ளன. அதை எல்லாம் இனி வரும் நேர்காணல்களில் லோகேஷ் கனகராஜ் ரசிகரகளிடம் பகிர்ந்துகொள்வார் என்று எதிர்பார்க்கலாம் படப்பிடிப்பின் போது குறிப்பிட்டு சொல்லும் படியான ஒரு நிகழ்ச்சியை தெரிவித்துள்ளார் லோகி  ” படப்பிடிப்பின் போது சுவாரஸ்யமான நிகழ்ச்சிகள் நிறைய நடந்திருக்கின்றன. எனக்கும் விஜய் அண்ணாவுக்கு சண்டை என்று எல்லாம் இணையதளத்தில் செய்தி பரவியது. அந்த செய்தி வெளியானபோது நானும் விஜய் அண்ணாவும் சேர்ந்து தான் இருந்தோம் . அப்போது இருவரும் இந்த செய்தியைப் பார்த்து ஜாலியாக ரசித்துக் கொண்டிருந்தோம்.


விஜய் போட்ட கண்டிஷன்


”லியோ படத்தின் படப்பிடிப்புத் தொடங்கிய முதல் நாளில் விஜய் அண்ணா என்னை அழைத்து சண்டைக்காட்சிகளில் தானே நடிப்பேன் என்றும், தன்னை கேட்காமல் டூப் போடுவது பற்றி யோசிக்க வேண்டாம் என்று சொல்லிவிட்டார். என்னால் முடியவில்லை என்றால் நானே சொல்கிறேன் என்றும் விஜய் அண்ணா சொன்னார். இந்தப் படத்தில் தான் விஜய் அன்னா இதுவரை இல்லாத அளவு சண்டைப் போட்டிருக்கிறார். இதுவரை யாராவது அவரை இவ்வளவு சிரமப்ப்படுத்தி இருக்கிறார்களா? என்று நான் அவரிடம் கேட்டேன். அதற்கு அவர் இல்லை என்று பதில் சொன்னார். ஒரு குறிப்பிட்ட காட்சியில் சுமார் 400 பேர்கள் கூட்டத்துடன் விஜய் சண்டை போடும் காட்சி மிக சிறப்பாக வந்திருக்கிறது.” என்று லோகி தெரிவித்துள்ளார்