நடிகர் விஜய்யின் பனையூர் இல்லதில் கடந்த மாதம் விஜய் மக்கள் இயக்கம் சார்பாக கூட்டம் நடைபெற்றது. அதில் கலந்துகொள்ள அனைத்து மாவட்டங்களில் உள்ள உறுப்பினர்களும் விஜய்யின் இல்லத்தின் முன் குவிந்தனர்.  அப்போது நடந்த கூட்டம் போல் இன்றும் பனையூரில் உள்ள விஜய் இல்லத்தில் விஜய் மக்கள் இயக்க நிர்வாகிகள் கூட்டம் நடைபெற்றது.


இந்த கூட்டத்தின்போது, தன்னை சந்திக்க வந்த ரசிகர் ஒருவரை நடிகர் விஜய் அலேக்காக தூக்கி தனது மகிழ்ச்சியை வெளிப்படுத்தினார். தற்போது அந்த புகைப்படம் இணையத்தில் வைரலாகி வருகிறது. அடுத்தடுத்து நடந்து வரும் கூட்டங்களில் பல அறிவுறுத்தல்களை கூறி வரும் விஜய்,  பொங்கலுக்கு ரிலீஸாகும் வாரிசு மற்றும் துணிவு படங்கள் ஒரே சமயத்தில் வெளியாவதால் ஏற்படும் சச்சரவுகளை தவிர்க்க வேண்டும் என இந்த கூட்டத்தில் நிர்வாகிகளுக்கு அறிவுறுத்தியுள்ளார்.







கட்-அவுட், பேனர்களுக்கு பாலாபிஷேகம் செய்வதையும், வருங்கால முதலமைச்சரே என போஸ்டர்கள் அடிப்பதை தவிர்க்க வேண்டும் என விஜய் தனது ரசிகர்களுக்கு அறிவுறுத்தியுள்ளார்.   


 


கடந்த கூட்டத்தில் நடிகர் விஜயை சந்தித்த ரசிகர்கள் கூறியதாவது :


தளபதியை பார்த்தது எங்களுக்கு ஒரு வர பிரசாதம்தான். எங்களுக்கு அவர் அட்வைஸ் செய்தார். முதலில் குடும்பத்தை நன்றாக பார்த்து கொள்ள வேண்டும் என்று சொன்னார்கள். பின் இயக்கத்தை  படி படியாக வளர்க்க வேண்டும் என்று சொன்னார். எல்லோரையும் அரவணைத்து நடக்க வேண்டும் என்றும் கூறினார்கள்.


நாங்கள் செய்து வரும் னால திட்டங்களை மேன்மேலும் செய்து வர சொன்னார்கள். பால் அபிஷேகம் போன்றவற்றை அறவே தவிர்க்க வேண்டும் என்றும், பால் மற்றும் முட்டை போன்ற உணவு பொருட்களை ஞாயிற்றுகிழமை தோறும் குழந்தைகளுக்கு கொடுக்க வேண்டும் என்று சொன்னார்.இது போக ரத்தம் தேவை படுபவர்களுக்கு, ரசிகர்களாகிய எங்களை ரத்ததானம் கொடுத்து உதவ சொன்னதாக ரசிகர்கள் தெரிவித்துள்ளனர்.


மேலும் படிக்க : Vijay meet fans: பிரியாணி ரெடி; ‘தளபதி 67’ லுக்கில் மாஸாக வந்த விஜய்.. பனையூரில் ஆர்ப்பரித்த ரசிகர்கள்..!