‘வாரிசு’ படத்தின் ஷூட்டிங் தொடர்பான வீடியோ வெளியாகி சமூகவலைதளங்களில் வைரலாகி வருகிறது.
இயக்குனர் வம்சி பைடிபள்ளி இயக்கத்தில் விஜய் நடிப்பில் உருவாகி வரும் வாரிசு படத்தில் நடிகை ராஷ்மிகா மந்தனா ஹீரோயினாக நடித்துள்ளார். அதுமட்டுமல்லாமல் பிரகாஷ்ராஜ், சரத்குமார், பிரபு, ஷாம்,சங்கீதா, ஜெயசுதா, உள்ளிட்ட மிகப்பெரிய நட்சத்திர பட்டாளமே இப்படத்தில் இணைந்துள்ளதாலும் வாரிசு படத்திற்கு பெரும் எதிர்பார்ப்பு நிலவுகிறது.
தமன் இசையமைக்கும் இப்படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர்கள் கடந்த ஜூன் 21 ஆம் தேதி விஜய்யின் பிறந்தநாளை முன்னிட்டு வெளியாகி வரவேற்பை பெற்றது. அதனைத்தொடர்ந்து வாரிசு திரைப்படம் பொங்களுக்கு வெளியாகும் என அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டது. இதனையடுத்து கடந்த நவம்பர் 5 ஆம் தேதி வாரிசு படத்தில் இருந்து முதல் சிங்கிள் பாடலான ‘ரஞ்சிதமே ரஞ்சிதமே’ பாடல் வெளியாகி, ரசிகர்களிடம் கலவையான விமர்சனங்களை பெற்றது.
இந்த நிலையில் நேற்றைய தினம் வாரிசு படத்தின் தயாரிப்பாளரை குறிப்பிட்டு தெலுங்கு தயாரிப்பாளர் சங்கம் அறிக்கை ஒன்றை வெளியிட்டது. அந்த அறிக்கையில், “ “ தெலுங்கு திரைப்படங்களின் தயாரிப்பு செலவு அதிகரிப்பு, தயாரிப்பாளர்களின் நலன், தெலுங்குத் திரைப்படத் துறையை காப்பாற்றுதல் ஆகியவற்றை கருத்தில் கொண்டு 08.12.2017 அன்று நடைபெற்ற தெலுங்குத் திரைப்பட வர்த்தக சபையின் அவசரக் கூட்டத்தில், சக்ராந்தி (பொங்கல்) மற்றும் தசரா (விஜயதசமி) ஆகிய பண்டிகைகளின் போது, திரையரங்குகளில் நேரடி தெலுங்கு திரைப்படங்களுக்கு மட்டுமே முன்னுரிமை கொடுக்க வேண்டும் என்ற தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.
இது தொடர்பாக, பிரபல தயாரிப்பாளரும், தெலுங்கு திரைப்பட வர்த்தக சபையின் தற்போதைய துணைத் தலைவருமான ஸ்ரீ தில்ராஜு, 2019ஆம் ஆண்டு ஊடகங்கள் மூலம், பண்டிகைக் காலங்களில் டப்பிங் செய்யப்பட்ட தெலுங்குப் படங்களுக்கு எப்படி திரையரங்குகளை வழங்குவது என்பது பற்றி கூறியிருக்கிறார். அதன்படி, பண்டிகை காலங்களில் நேரடி தெலுங்கு படங்களுக்கு முன்னுரிமை அளித்து, அந்தப்படங்களுக்கு அளித்தது போக, மீதமிருக்கும் திரையரங்குகளை தெலுங்கில் டப் செய்து வெளியிடப்படும் படங்களுக்கு கொடுக்க வேண்டும் என்று முடிவு செய்யப்பட்டது. அந்த முடிவின் படி, விநியோகஸ்தர்கள் சக்ராந்தி மற்றும் தசரா பண்டிகைகளில் நேரடி தெலுங்கு படங்களுக்கு முன்னுரிமை அளித்து, அவைகளுக்கு போக மீதமிருக்கும் திரையரங்குகளை தெலுங்கில் டப் செய்து வெளியிடப்படும் படங்களுக்கு கொடுக்க வேண்டுமென தெலுங்கு தயாரிப்பாளர் சங்கம் கேட்டுக்கொள்கிறது” என அந்த அறிக்கையில் குறிப்பிடப்பட்டு இருந்தது.