Watch video: ரொம்ப.. ரொம்ப கியூட்..! சுட்டிக்குழந்தையுடன் வீடியோ காலில் பேசிய நடிகர் விஜய்..! வைரலாகும் வீடியோ..!

பல்லவரத்தை சேர்ந்த ஒரு குட்டி பெண் குழந்தையின் ஆசையை நிறைவேற்றுவதற்காக வீடியோ கால் செய்து பேசிய நடிகர் விஜய்யின் சோசியல் மீடியாவில் வைரலாக பகிரப்பட்டு வருகிறது.

Continues below advertisement

தமிழ் சினிமாவின் மாஸ் நடிகராக லட்சக்கணக்கான ரசிகர்களை  உலகளவில் கொண்ட ஒரு நடிகர் இளைய தளபதி விஜய். இளைஞர்கள், பெண்கள் அனைவரின் சப்போர்ட்டும் கொண்ட ஒரு நடிகர் மட்டுமின்றி சுட்டி குழந்தைகளின் ஃபேவரட் நடிகராகவும் இருந்து வருகிறார். அதை நிரூபிக்கும் விதமாக சுட்டி குழந்தை ஒன்று விஜய் அங்கிளுடன் பேச வேண்டும் அவரை பார்க்க வேண்டும் என அடம் பிடித்ததை தொடர்ந்து அந்த பெண் குழந்தையுடன் வீடியோ கால் மூலம் நடிகர் விஜய் பேசிய வீடியோ ஒன்று சோசியல் மீடியாவில் காட்டு தீ போல வைரலாக பகிரப்பட்டு வருகிறது. 

Continues below advertisement

 

சம்பவம் லோடிங் :

நடிகர் விஜய் நடிப்பில் சமீபத்தில் வெளியான திரைப்படம் 'வாரிசு'. அதனை தொடர்ந்து லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் இரண்டாவது முறையாக 'லியோ - ப்ளடி ஸ்வீட்' திரைப்படம் மூலம் ஜோடி சேர்ந்துள்ளார் விஜய். இப்படத்தின் படப்பிடிப்பு மிகவும் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. காஷ்மீரில் படப்பிடிப்பை முடித்த படக்குழு அடுத்த கட்டமாக சென்னையில் சில தினங்களில் படப்பிடிப்பை துவங்க உள்ளது. விஜய் ஜோடியாக திரிஷா நடிக்கும் இப்படத்தில் பிரியா ஆனந்த், மிஷ்கின், கௌதம் மேனன், அர்ஜுன், சஞ்சய் தத், மன்சூர் அலி கான், சாண்டி மாஸ்டர் என ஏராளமானோர் இப்படத்தில் நடிக்கிறார்கள் என்பதாலும் லோகேஷ் கனகராஜின் சம்பவத்திற்காகவும் மிகவும் ஆவலுடன் காத்திருக்கிறார்கள் ரசிகர்கள். 

அடம் பிடித்த குழந்தை :

சின்ன குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை அனைத்து வயதினருக்கும் நம்ம வீட்டு பிள்ளை போன்ற ஒரு ஃபீல் கொடுப்பவர் விஜய். சுட்டி குழந்தைகளுக்கு விஜய்யின் டான்ஸ் என்றால் ரொம்ப இஷ்டம். அவரின் விளையாட்டு தனமான முகபாவனைகளுக்கு இளைஞர்களை காட்டிலும் மிக பெரிய பேன்ஸ் இந்த குழந்தைகள் தான். அந்த வகையில் பல்லாவரத்தை சேர்ந்த சுட்டி பெண் குழந்தை ஒன்று "விஜய் அங்கிள் என்னை பார்க்க வரமாட்டீங்களா நான் உங்களை பார்க்க வேண்டும்" என அடம் பிடிக்கும் வீடியோ ஒன்று சோசியல் மீடியாவில் வைரலானது. 

 

 

வீடியோ காலில் பேசிய விஜய் :

குழந்தை அடம் பிடிக்கும் வீடியோ நடிகர் விஜய் கவனத்திற்கு எடுத்து செல்லப்பட்டது. அதைத்தொடர்ந்து விஜய் அந்த குழந்தை மற்றும் குடும்பத்தாரிடம் வீடியோ கால் மூலம் பேசியுள்ளார். குழந்தையையும் அவரது குடும்பத்தையும் மிகவும் அன்புடன் நலம் விசாரித்தார். குழந்தையும், விஜய்யை பார்த்து நீங்க ரொம்ப க்யூட்டா இருக்கீங்க என வெட்கப்பட்டு சொல்லவும் விஜயும் கியூட் ரியாக்ஷன் கொடுக்கிறார். குழந்தையும், விஜய் அங்கிளுடன் பேசியதை நினைத்து பூரித்துப் போனது.   இப்படி க்யூட்டாக போன வீடியோ கால் சோசியல் மீடியாவில் ட்ரெண்டிங்கில் உள்ளது. குழந்தையின் ஆசையை உடனே நிறைவேற்றிய தளபதியை அவரின் ரசிகர்கள் கொண்டாடி வருகிறார்கள்.  

Continues below advertisement
Sponsored Links by Taboola