விஜய் நடிக்கும் ‘ஜனநாயகன்’ படத்தின் முதல் பாடல் வரும் 8ஆம் தேதி வெளியாகும் என தயாரிப்பு நிறுவனம் அறிவித்துள்ளது.
எச் வினோத் இயக்கத்தில் விஜயின் கடைசி படமாக உருவாகியுள்ள ஜனநாயகன் திரைப்படம் 2026 ஆம் ஆண்டு ஜனவரி 9 ஆம் தேதி வெளியாக இருக்கிறது. இதுவரை இப்படத்தின் ஃபர்ஸ்ட் லுக் மற்றும் விஜய் பிறந்தநாள் க்ளிம்ப்ஸ் வீடியோக்களை படக்குழு வெளியிட்டுள்ளது. இதனைத்தொடர்ந்து, படத்தின் நாயகி பூஜா ஹெக்டேவின் பிறந்தநாளை முன்னிட்டு அவரது கதாபாத்திரத்தின் பெயரை போஸ்டர் வெளியிட்டு அறிவித்தது படக்குழு.
முதல் சிங்கிள் பாடல்
இந்த நிலையில், விஜய் ரசிகர்களுக்கு சர்ப்ரைஸ் ஆக அடுத்தடுத்து போஸ்டர்களை வெளியிட்டு படக்குழு அசத்தியுள்ளது. முதலில் விஜய் இருக்கிறமாதிரி புதிய போஸ்டரை வெளியிடப்பட்டது. அதில், மக்கள் மத்தியில் விஜய் மாஸாக நிற்கிறார். கண்ணாடியுடன் முறுக்கிய மீசையுடன் இருக்கும் விஜயை சுற்றியிருக்கும் அவர் மீது கை வைத்து ஏதோ சொல்வது போல இருக்கிறது.
தற்போது, ஜனநாயகன் படத்தின் முதல் சிங்கிள் பாடல் வரும் 8ஆம் தேதி வெளியாகும் என்று படக்குழு அறிவித்துள்ளது. இதுதொடர்பாக போஸ்டரை வெளியிட்ட படக்குழு, அதில் விஜயின் கால்கள் இருப்பது போலவும், அதில் அவர் ஒரு பந்தை தரையில் அடிப்பதுபோலவும் இடம்பெற்றுள்ளது.
ஜனநாயகன் படத்தில் இருந்து இதுவரை போஸ்டர்கள், சின்ன டீசர் மட்டுமே வெளியானது. தற்போது, முதல் சிங்கிள் வெளியாகும் என்ற அறிவிப்பு விஜய் ரசிகர்களுக்கு மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. அனிருத் இசையில் வெளியாகும் விஜயின் பாடல்கள் எல்லாம் வேற ரகத்தில் இருக்கும், அதுவும் முதல் சிங்கிள் பற்றியெல்லம் சொல்லத் தேவையேயில்லை.முதல் சிங்கிள் பாடலை அனிருத் அல்லது விஜய் என இருவரில் ஒருவர் பாடியிருக்கலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
ஜனநாயகன் திரைப்படத்தை கேவிஎன் ப்ரோடக்ஷன்ஸ் தயாரித்து வருகிறது. அனிருத் இசையமைக்கிறார். பாபி தியோல் , மமிதா பைஜூ , பிரியாமனி , கெளதம் மேனன் , பிரகாஷ் ராஜ் , தீஜே அருணாச்சலம் உள்ளிட்ட பலர் இப்படத்தில் நடித்துள்ளார்கள்.