எச் வினோத் இயக்கத்தில் விஜயின் கடைசி படமாக உருவாகியுள்ள ஜன நாயகன் திரைப்படம் 2026 ஆம் ஆண்டு ஜனவரி 9 ஆம் தேதி வெளியாக இருக்கிறது. இதுவரை இப்படத்தின் ஃபர்ஸ்ட் லுக் மற்றும் விஜய் பிறந்தநாள் க்ளிம்ப்ஸ் வீடியோக்களை படக்குழு வெளியிட்டுள்ளது. இன்று படத்தின் நாயகி பூஜா  ஹெக்டேவின் பிறந்தநாளை முன்னிட்டு அவரது கதாபாத்திரத்தின் பெயரை போஸ்டர் வெளியிட்டு அறிவித்துள்ளது படக்குழு

Continues below advertisement

பூஜா ஹெக்டே ஸ்பெஷல் ஜனநாயகன் அப்டேட்

தமிழ், தெலுங்கில் முன்னணி நடிகையாக வலம் வரும் பூஜா ஹெக்டேவுக்கு இன்று பிறந்தநாள். விஜயுடன் பீஸ்ட் படத்தில் நடித்ததைத் தொடர்ந்து தற்போது ஜன நாயகன் படத்தில் நடித்துள்ளார். அவரது பிறந்தநாளை முன்னிட்டு ஜன நாயகன் படக்குழு சிறப்பு போஸ்டர் ஒன்றை வெளியிட்டுள்ளது. இப்படத்தில் கயல் என்கிற கதாபாத்திரத்தில் பூஜா ஹெக்டே நடித்துள்ளார்

ஜனநாயகன் படக்குழு 

ஜனநாயகன் திரைப்படத்தை கேவிஎன் ப்ரோடக்‌ஷன்ஸ் தயாரித்து வருகிறது. அனிருத் இசையமைக்கிறார். பாபி தியோல் , மமிதா பைஜூ , பிரியாமனி , கெளதம் மேனன் , பிரகாஷ் ராஜ் , தீஜே அருணாச்சலம் உள்ளிட்ட பலர் இப்படத்தில் நடித்துள்ளார்கள். 

பகவந்த் கேசரி ரீமேக் 

தெலுங்கில் பாலையா நடித்த பகவந்த் கேசரி படத்தின் மையக்கதையை அடிப்படையாக கொண்டு ஜனநாயகன் திரைப்படம் உருவாகி வருகிறது. இதற்காக பகவந்த் கேசரி தயாரிப்பு நிறுவனத்திற்கு ரூ 3 கோடி கொடுத்து கதைக்கான காப்புரிமையை பெற்றுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. 

ஜனநாயகன் படத்துடன் மோதும் பிற படங்கள்

2026 ஆம் ஆண்டு பொங்கலுக்கு ஜனநாயகன் படத்துடன் இன்னும் இரு படங்கள் களமிறங்க இருக்கின்றன. டான் பிக்ச்சர்ஸ் தயாரிப்பில் சுதா கொங்காரா இயக்கத்தில் சிவகார்த்திகேயன் நடித்துள்ள பராசக்தி திரைப்படம் ஜனவரி 14 ஆம் தேதி வெளியாக இருக்கிறது. அதேபோல் ஆர்.ஜே பாலாஜி இயக்கத்தில் சூர்யா நடித்துள்ள கருப்பு திரைப்படமும் பொங்கலுக்கு வெளியாக இருப்பதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. இப்படத்தின் ரிலீஸ் தேதி இதுவரை உறுதிப்படுத்தப்படவில்லை.