வாகை சந்திரசேகர்


சினிமா தான் என்றாலும் ஒரு சில முகங்கள் நமக்கு மிகவும் நெருக்கமானதாக நம்ம வீட்டில் இருக்கும் ஒரு உறவை ஞாபகப்படுத்தும் ஒரு பரிச்சயமான முகமாக இருக்கும். அப்படி ஏராளமான படங்களில் சப்போர்டிங் கதாபாத்திரங்களில் நாம் பார்த்து பழகிய ஒரு நடிகர் தான் வாகை சந்திரசேகர். 


சாதாரண ஒரு உடல் தோற்றம் கொண்ட ஒருவர் கூட நடிகனாகலாம் என இன்றைய தனுஷூக்கெல்லாம் முன்னோடியாக கலக்கியவர் வாகை சந்திரசேகர். ஹீரோ, நண்பன், நெகட்டிவ் கேரக்டர் என எந்த ஒரு கதாபாத்திரம் கொடுத்தாலும் அதை சிறப்பாக நிறைவாக செய்யக்கூடிய திறமையான நடிகர். நாடகத்தில் இருந்து சினிமாவுக்கு வந்தவர் என்பதால் அவரின் வசன உச்சரிப்பும், இலகுவான உடல்வாகும், லாவகமாக கதாபாத்திரத்தில் பொருத்திக்கொள்ளும் அசாத்தியமான திறமையும் அவரின் ஸ்பெஷலிட்டி என்றே சொல்ல வேண்டும்.


 



பிளாஷ்பேக் போட்டோ 


அந்த வகையில் மிகவும் பிரபலமான ஒரு நடிகனாக இருந்த வாகை சந்திரசேகரின் திருமண புகைப்படங்கள் , சமீபத்தில் இணையத்தில் பகிரப்பட்டு லைக்ஸ்களை குவித்து வருகின்றன. அவரின் திருமண வரவேற்பு விழாவில் ஏராளமான திரை நட்சத்திரங்கள் கலந்து கொண்டுள்ளனர். அதில் ஒரு ஸ்பெஷல் புகைப்படம் தான் எஸ்.ஏ.சந்திரசேகர் மற்றும் ஷோபா சந்திரசேகர் கலந்து கொண்டு மணமக்களை வாழ்த்திய அந்த புகைப்படம். அதில் நம்ம சிறு வயது தளபதி விஜய் இருப்பது தான் கூடுதல் கவனம் பெற்று தற்போது ட்ரெண்டிங்காகி வருகிறது. 


லியோ ஆடியோ லான்ச்


விஜய்யின் பிளாஷ்பேக் புகைப்படங்கள் என்றுமே விஜய் ரசிகர்கள் மத்தியில் என்றுமே வரவேற்பை அள்ளும் ஸ்பெஷல் கிளிக்ஸ். குட்டி ஸ்டாராக வலம் வந்த விஜய் இன்று தமிழ் சினிமாவின் தற்போது மிக முக்கியமான ஸ்டார் நடிகர்களில் ஒருவராகத் திகழ்கிறார். இந்நிலையில் விஜய் கலந்துகொண்டு வாகை சந்திரசேகரை வாழ்த்திய ஃபோட்டோ தற்போது அவரது ரசிகர்களிடம் இதயங்களைப் பெற்று வைரலாகி வருகிறது.


 



என்றுமே டாக் ஆஃப் தி டவுன்னாக இருந்து வரும் விஜய் தற்போது ட்ரெண்டிங்கில் இருந்து வருவதற்கு காரணம் லியோ ஆடியோ லான்ச் ரத்து. செப்டம்பர் 30ம் தேதி நடைபெற இருந்த இந்த இசை வெளியீட்டு விழா ஒரு சில காரணங்களால் ரத்து செய்யப்பட்டது அவரின் ரசிகர்களுக்கு பெரிய ஏமாற்றத்தை கொடுத்தது. 


பொதுவாகவே நடிகர் விஜய் நடிக்கும் படங்களின் இசை வெளியீட்டு விழாவுக்கு ரசிகர்கள் மத்தியில் எதிர்பார்ப்பு மிகவும் அதிகமாக இருக்கும். அதற்கு காரணம் விஜய் சொல்லும் 'குட்டி ஸ்டோரி'. இந்த முறை அது நிறைவேறாமல் போனதால் ரசிகர்களுக்கு பெரிய வருத்தத்தை கொடுத்துள்ளது. இந்த நிலையில் வரும் அக்டோபர் 19ம் தேதி உலகெங்கிலும் 'லியோ' திரைப்படம் பிரமாண்டமாக வெளியாக உள்ளது.