அஜித் ஒரு பைக் பிரியர், ரேஸ் பிரியர் என்பதெல்லாம் முன்னுரை , முடிவுரை சொல்லித் தெரிய வேண்டியதில்லை. அஜித்தின் பைக் மோகம், அவர் சந்தித்த விபத்துக்களை எல்லாம் கடந்து, அவரை இன்னும் இன்னும் அதனுள் இழுத்துக் கொண்டே இருக்கிறது. உடலெல்லாம் அறுவை சிகிச்சை செய்து, தழும்புகளால் நிறம்பியிருக்கும் அவரது உடலுக்குத் தெரியும், அதன் ரணம். 


அதெல்லாம் ஒருபுறமிருக்க, ஒவ்வொரு காலகட்டத்திலும் அஜித் தனது பயணத்தை அதாவது ஆசையை விடுவதாக இல்லை. திடீரென கார் ரேஸ் புறப்படுவது. அப்புறம் திடீரென ஹெலிகாப்டர் பறக்கவிடுவது, அப்புறம், திடீரென பைக் ரைடு செல்வது. அப்புறம், துப்பாக்கியோடு ரைஃபில் கிளப் செல்வது என, ஒரு ஸ்போர்ட்ஸ்மேன் ஷிப் வாழ்க்கையை வாழ்ந்து கொண்டிருக்கிறார் அஜித். 


இத்தனைக்கும், பிஸியான சினிமா வாழ்க்கைக்கு நடுவே. தல 61 எனப்படும் துணிவு படத்தின் இறுதி கட்ட வேலைகள் இன்று நடந்து கொண்டிருக்கிறது. பரபரப்பாக ஷூட்டிங் நடந்து கொண்டிருந்த போது, ஐரோப்பா பயணம், பைக் ரைடு, இந்தியா, தாய்லாந்து என எங்கெங்கோ பறந்து கொண்டே இருந்தார் தல. ஷூட் நடந்து கொண்டிருக்கும் போதே, தன் டேட்டுகளுக்கு ஏற்றவாறு பயணத்திட்டத்தை மாற்றிக் கொண்டே இருந்தார். அதிலும் குறிப்பாக, துணிவு படத்தில் நடத்த மஞ்சு வாரியரையும் தன் ரைடில் இந்த முறை இணைத்துக் கொண்டார். அதன் பின் அஜித் பைக்கில் இன்சூரன்ஸ் இல்லை, விதிமீறல் என்றெல்லாம் விமர்சனம் எழுந்தது வேறு கதை.






பொங்கல் ரிலீஸ் படங்களுக்கான ரேஸில் உள்ள துணிவு மற்றும் வாரிசு படங்களில், வாரிசு படத்திற்கான ப்ரமோஷன் சிறப்பாக நடந்து கொண்டிருக்கிறது. ஆனால், வழக்கம் போல ப்ரமோஷன் எதிலும் பங்கேற்காமல், ஹாயாக ஊர் சுற்றி, தனித்தவராக இதிலும் முத்திரை பதித்து வருகிறார் அஜித். ‛நல்ல படத்திற்கு எந்த ப்ரமோஷனும் தேவையில்லை’ என்று அதற்கு விளக்கமும் கொடுத்தாகிவிட்டது. 


அதை விட முக்கியமான ஒன்று, துணிவு படம் முடிந்ததும், அஜித் உலகை சுற்றப் போகிறார், அடத்த ஒன்றரை ஆண்டுகளுக்கு அவர் நடிக்கப் போவதில்லை என்றெல்லாம் செய்திகள் வந்து கொண்டிருக்கின்றன. இதெல்லாம் ஒருபுறம் போய் கொண்டிருக்க, அஜித்தின் நேரடி போட்டியாளரான நடிகர் விஜய்யின் தந்தையும் இயக்குனருமான எஸ்.ஏ.சந்திசேகர், பைக் ரைடு டூர் மேற்கொண்டுள்ளார். மலைகள் சூழ்ந்த பகுதியில் புல்லட் உடன் அவர் நிற்கும் புகைப்படம் சமீபத்தில் வெளியாகியுள்ளது. 


அரைகால் டவுசருடன் ஜம்முனு புல்லட் அருகே நின்று கொண்டு ஸ்டைலாக ஸ்டில் கொடுத்திருக்கிறார் எஸ்.ஏ.சி. சமீபத்தில் நடிகர் விஜய் உடன் மனக்கசப்பு ஏற்பட்டு, மனைவியுடன் தனியாக வாழ்ந்து வரும் எஸ்.ஏ.சி, பல்வேறு மன உளைச்சலுக்கு ஆளானார். இந்நிலையில் தான், அதிலிருந்து மீண்டு வர, ஒரு நீண்ட பயணத்தை தொடங்கியிருக்கிறார் எனத்தெரிகிறது.


எது எப்படியோ, தன் மகனுக்கு நேரடி போட்டியாளராக கருத்தப்படும் அஜித் குமாருக்கு போட்டியாக, பைக் ரைடு போட்டியில் இறங்கியிருக்கும் எஸ்.ஏ.சி, கிட்டத்தட்ட அஜித் மாதிரியே தோற்றத்திலும் தென்படுவது கொஞ்சம் ஜாலியாக போட்டியாகவே தெரிகிறது.