அஜித் குமார்


 துபாயில் நடைபெற்ற மிச்லின் 24H கார் பந்தையத்தில் நடிகர் அஜித் கலந்துகொண்டு முன்றாம் இடத்தை பிடித்துள்ளது ரசிகர்களுக்கு பெரியளவில் உற்சாகத்தை கொடுத்துள்ளது. துபாயில் நடைபெற்ற 24 மணி நேரம் போர்ஷி 991 கேடகரி கார் ரேஸில் அஜித்தின் அஜித் குமார் ரேஸிங் குழு கலந்துகொண்டது. இந்த போட்டியில் அஜித்தின் குழு மூன்றாவது இடத்தை பிடித்தது. இந்த வெற்றியை அஜித் மற்றும் அவரது குழுவினர் ரேஸ் களத்தில் கொண்டாடினர். நடிகர் அஜித் தேசிய கோடியை கையில் ஏந்தி கொண்டாடினார். 


அஜித்தின் இந்த வெற்றியை ரசிகர்களும் பெரியளவில் கொண்டாடி வருகிறார்கள். தமிழ் திரையுலகினரைச் சேர்ந்த பலர் அஜித்திற்கு வாழ்த்து தெரிவித்து வருகிறார்கள். இப்படியான நிலையில் விஜய் ரசிகர்கள் அஜித் வெற்றி போலியானது என்றும் அஜித் தனது ரேஸிங் கம்பேனியை ப்ரோமோட் செய்யவே இந்த பப்ளிசிட்டி செய்வதாக கூறி வருகிறார்கள்.


அஜித் வாங்கியது ஆறுதல் பரிசா ?


துபாயில் அஜித் கலந்துகொண்ட கார் பந்தையத்தில் அஜித் கலந்துகொண்ட பிரிவு போர்ஷீ 991. இந்த பிரிவில் மட்டுமே அஜித் குழு மூன்றாவது இடத்தை பிடித்துள்ளது என்றும் மொத்த ரேஸில் அஜித் மூன்றாவது இடத்தை பிடிக்கவில்லை என்றும் மதன் கெளரி வீடியோ வெளியிட்டுள்ளார். 


வயித்தெரிச்சல் படும் விஜய் ரசிகர்கள்






இந்த வீடியோவை பகிரும் விஜய் ரசிகர்கள் அஜித்திற்கு கிடைத்தது வெறும் ஆறுதல் பரிசுதான் என்றும். ஆனால் அவர் ஏதோ பெரிய பரிசை அடித்துவிட்டதாக பி.ஆர் மூலம் ப்ரோமோஷன் செய்கிறார். இதெல்லாம் தனது ரேஸிங் கம்பேனியை விளம்பரப்படுத்த செய்யப்படும் யுக்தி என விஜய் ரசிகர்கள் தெரிவித்து வருகிறார்கள்.


 


அஜித் அடுத்தடுத்து வர இருக்கும் 8 சிறிய ரேஸில் கலந்துகொள்ள இருக்கிறார். துபாயில் நடைபெற்ற ரேஸில் அஜித் கலந்துகொண்டதால் இந்த விளையாட்டிற்கு பரவலான ஊடக கவனம் கிடைத்துள்ளதாகவும் மேலும் பல்வேறு திசைகளில் இருந்து ஸ்பான்சர்கள் வருவதாகவும் அஜித்  ரேஸிங் குழு சார்பாக தெரிவிக்கப்பட்டுள்ளது.