தளபதி  விஜய்யின் 68ஆவது படத்தை இயக்குநர் வெங்கட் பிரபு இயக்கி வருகிறார். படத்திற்கான வேலைகளுக்காக அமெரிக்கா சென்றுள்ளனர் நடிகர் விஜய் மற்றும் வெங்கட் பிரபு. இந்நிலையில் புகழ்பெற்ற ஹாலிவுட் நடிகரான டென்ஸல் வாஷிங்டன் நடித்து சமீபத்தில் வெளியாகி இருக்கும் ‘ஈக்வலைஸர்’ படத்தின் மூன்றாம் பாகத்தை முதல் நாள் பார்த்து ரசித்தார் டென்ஸல் வாஷிங்டனின் மிகப்பெரிய ரசிகரான நடிகர் விஜய்.


இந்தத் தருணத்தை படம்பிடித்த இயக்குநர் வெங்கட் பிரபு தனது ட்விட்டர் தளத்தில் “இன்று நான் நடிகர் விஜய்யின் ஃபேன்பாய் தருணத்தை பார்த்து ரசித்தேன்" என்று தனது ட்விட்டர் தளத்தில் பதிவிட்டிருந்தார்.






இந்தப் பதிவு இணையதளத்தில் வைரலாகியது மட்டுமல்லாமல், இதில் குறிப்பிடப்பட்ட டென்ஸல் வாஷிங்டனின் பெயரும் சேர்ந்து வைரலாகி வருகிறது. விஜய் ரசிகர்கள் அனைவரும் தளபதி விஜய்யையே ஃபேன் பாயாகக் கொண்டிருக்கும் அந்த ஹாலிவுட் நடிகர் யார் என்று இணையதளத்தில் டென்ஸல் வாஷிங்டன் நடித்த படங்கள் மற்றும் அவரைப் பற்றியத் தகவல்களைத் தேடிவருகிறார்கள்.


ஒரு  பக்கம் இதனை நெட்டிசன்கள் ரசிக்க, மறுபக்கம் விஜய் ரசிகர்களின் இந்த செயல் பற்றி நகைச்சுவை மீம்களாகவும் பகிர்ந்து வருகிறார்கள் நெட்டிசன்கள். இந்த மீம்களை வரிசையாக பார்க்கலாம்.














 


மேலும் டென்சல் வாஷிங்டன் பற்றிய பல சுவாரஸ்யத் தகவல்களை சினிமா ஆர்வலர்களும் ரசிகர்களும் பகிர்ந்து வருகின்றனர்.










நடிகர் விஜய் நடிப்பில் லியோ அக்.19ஆம் தேதி திரைக்கு வரும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ள நிலையில், தளபதி 68 பட ஷூட்டிங் விரைவில் தொடங்க உள்ளது.