நாள் - 03.09.2023 - ஞாயிற்றுக்கிழமை


நல்ல நேரம்:


காலை 8.15 மணி முதல் காலை 9.00 மணி வரை


மாலை 3.15 மணி முதல் மாலை 4.45 மணி வரை


இராகு:


மாலை 4.30 மணி முதல் மாலை 6.00 மணி வரை


குளிகை:


மாலை 3.00 மணி முதல்  மாலை 4.30 மணி வரை


எமகண்டம்:


நண்பகல் 12.00 மணி முதல் பகல் 1.30 மணி வரை


சூலம் - மேற்கு


மேஷம்


உடன்பிறந்தவர்கள் ஆதரவாக இருப்பார்கள். எதையும் சமாளிக்கும் மனப்பக்குவம் உண்டாகும். கல்வியில் ஆர்வமின்மை ஏற்படும். ஆன்மிக குருக்களின் ஆலோசனைகள் தெளிவினை உண்டாக்கும். புதிய தொழில்நுட்ப கருவிகளில் கவனம் வேண்டும். விதண்டாவாத பேச்சுக்களைக் குறைத்துக் கொள்ளவும். எழுத்து துறைகளில் புதிய அனுபவம் ஏற்படும். திறமை வெளிப்படும் நாள்.


ரிஷபம்


தனவரவுகளால் சேமிப்புகள் அதிகரிக்கும். பேச்சு வன்மையால் காரிய சித்தி ஏற்படும். குழந்தைகளைப் பற்றிய எண்ணங்கள் அதிகரிக்கும். வெளியூர் தொடர்பான பயணங்களால் அனுகூலம் ஏற்படும். சிந்தனைகளில் இருந்துவந்த குழப்பம் விலகும். இணைய துறைகளில் புதிய வாய்ப்புகள் கிடைக்கும். மருமகன் வழியில் இருந்துவந்த கருத்து வேறுபாடுகள் குறையும். மறதி குறையும் நாள்.


மிதுனம்


உத்தியோக பணிகளில் பொறுப்புகள் மேம்படும்.  வெளிவட்டாரத்தில் செல்வாக்கு அதிகரிக்கும். அரசுப் பணிகளில் அனுகூலம் உண்டாகும். சகோதர வகையில் அனுசரித்துச் செல்லவும். அனுபவ பேச்சுக்களால் நட்பு வட்டம் விரிவடையும். உடன் பிறந்தவர்கள் மனம் விட்டுப் பேசுவார்கள். வீடு மாற்றச் சிந்தனைகள் மேம்படும். எதிர்ப்புகள் விலகும் நாள்.


கடகம்


தந்தை வழி உறவுகளின் மூலம் ஒத்துழைப்பு கிடைக்கும். நீண்ட தூரப் பயண சிந்தனைகள் உண்டாகும். குருமார்களின் ஆலோசனைகள் தெளிவை ஏற்படுத்தும். குடும்பத்தில் பொறுப்புகள் அதிகரிக்கும். ஆரோக்கியம் தொடர்பான சில விரயங்கள் உண்டாகும். முயற்சிக்கு ஏற்ப முன்னேற்றமான வாய்ப்புகள் கிடைக்கும். விரும்பிய பொருட்களை வாங்கி மகிழ்வீர்கள். நன்மை நிறைந்த நாள்.


சிம்மம்


ஆரோக்கியம் தொடர்பான சிந்தனைகள் அதிகரிக்கும். செயல்பாடுகளில் கவனம் வேண்டும். புதிய இடத்திற்குச் செல்வதற்கான சூழல் உண்டாகும். உடனிருப்பவர்களைப் பற்றிய புரிதல் ஏற்படும். எதிலும் ஆர்வமின்மையான சூழல் அமையும். இனம்புரியாத சில சிந்தனைகளால் குழப்பம் உண்டாகும். உத்தியோகப் பணிகளில் அலைச்சல்கள் ஏற்படும். விவேகம் வேண்டிய நாள்.


கன்னி


கணவன், மனைவிக்கிடையே ஒற்றுமை அதிகரிக்கும். சுபகாரியம் தொடர்பான எண்ணங்கள் கைகூடும். நண்பர்களின் வழியில் ஒத்துழைப்பு கிடைக்கும். கூட்டு வியாபாரத்தில் முன்னேற்றம் ஏற்படும். வர்த்தகப் பணிகளில் சாதகமான சூழல் உண்டாகும். போட்டித் தேர்வுகளில் எதிர்பார்த்த முடிவு கிடைக்கும். தடைகள் குறையும் நாள்.


துலாம்


வழக்குகளில் பொறுமையுடன் செயல்படவும். மாணவர்களுக்கு மறதி சார்ந்த இன்னல்கள் குறையும். வாகனப் பயணங்களில் நிதானம் வேண்டும். அதிக பொறுப்புகளால் நேரம் தவறி உணவு உண்பீர்கள். எடுத்துச் செல்லும் உடைமைகளில் கவனம் வேண்டும். திடீர் செய்திகளின் மூலம் அலைச்சல்கள் ஏற்படும். சமூகப் பணிகளில் ஒத்துழைப்பு உண்டாகும். ஆசைகள் மேம்படும் நாள்.


விருச்சிகம்


சகோதரர் வழியில் ஒத்துழைப்பு உண்டாகும். வருமான வாய்ப்புகளை மேம்படுத்துவது தொடர்பான எண்ணங்கள் அதிகரிக்கும். அறிவுத்திறனை வெளிப்படுத்துவதற்கான வாய்ப்புகள் கிடைக்கும். தகவல் தொடர்புத் துறையில் லாபம் உண்டாகும். தாய்மாமன் வழியில் அனுசரித்துச் செல்லவும். நாவல் தொடர்பான விஷயங்களில் ஆர்வம் உண்டாகும். நட்பு மேம்படும் நாள்.


தனுசு


அரசு தொடர்பான செயல்களில் ஆதாயம் அடைவீர்கள். கணவன், மனைவிக்கிடையே அன்பு அதிகரிக்கும். எதிர்காலம் தொடர்பான சில முடிவுகளை எடுப்பீர்கள். வாகன மாற்றம் குறித்த சிந்தனைகள் மேம்படும். மேல்நிலைக் கல்வியில் தெளிவு பிறக்கும். கடன் சார்ந்த உதவி கிடைக்கும். சக ஊழியர்களால் அனுகூலம் ஏற்படும். உதவிகள் கிடைக்கும் நாள்.


மகரம்


குறுகிய தூரப் பயணங்களின் மூலம் புத்துணர்ச்சி அடைவீர்கள். சொத்து பிரச்சனைகளுக்குத் தீர்வு கிடைக்கும். உடன்பிறந்தவர்கள் ஒத்துழைப்பாக இருப்பார்கள். வியாபாரத்தில் புதிய யுத்திகள் கைகூடும். உயர் அதிகாரிகள் ஆதரவாக இருப்பார்கள். எதிலும் தன்னம்பிக்கையுடன் செயல்படுவீர்கள். உத்தியோகத்தில் சாதகமான சூழல் ஏற்படும். நிதானம் வேண்டிய நாள்.


கும்பம்


எதிர்பார்த்த சில உதவிகள் சாதகமாக அமையும். வியாபாரத்தில் முதலீடுகள் அதிகரிக்கும். பணி நிமிர்த்தமான புதிய வாய்ப்புகள் கிடைக்கும். பேச்சுக்களுக்கு மதிப்பு அதிகரிக்கும். எதிலும் உற்சாகத்துடன் செயல்படுவீர்கள். குழந்தைகளின் வழியில் அனுகூலம் உண்டாகும். கணவன், மனைவிக்கிடையே புரிதல் ஏற்படும். வரவு மேம்படும் நாள்.


மீனம்


செய்யும் பணிகளில் கவனம் வேண்டும். பழைய நினைவுகளின் மூலம் குழப்பம் உண்டாகும். கொடுக்கல், வாங்கலில் சிந்தித்துச் செயல்படவும். உடல் தோற்றத்தில் சில மாற்றங்கள் ஏற்படும். உத்தியோகப் பணிகளில் மாற்றமான சூழ்நிலைகள் அமையும். நேர்மறை சிந்தனைகளுடன் செயல்படவும். பொறுமை வேண்டிய நாள்.