Valimai Movie : அஜித் ரசிகரான நண்பரின் கடைசி ஆசை...! 'வலிமை' படம் பார்க்க திரளாக வந்த விஜய் ரசிகர்கள்...!

அஜித் ரசிகரான தங்களது நண்பரின் கடைசி ஆசையை நிறைவேற்ற விஜய் ரசிகர்கள் திரளாக வந்து வலிமை படத்தை முதல்நாள் முதல் ஷோவில் பார்த்து ரசித்தது அனைவருக்கும் நெகிழ்ச்சியை ஏற்படுத்தியது.

Continues below advertisement

உலகம் முழுவதும் வலிமை படம் இன்று வெளியானது. இரண்டரை ஆண்டுகளுக்கு பிறகு வலிமை படம் வெளியாகியுள்ளதால் தமிழ்நாடு முழுவதும் அவரது ரசிகர்கள் திரையரங்குகளில் படத்தை கொண்டாடி வருகின்றனர்.

Continues below advertisement


இந்த நிலையில், சென்னையில் அஜித்தின் ரசிகருக்காக விஜயின் ரசிகர்கள் கூட்டமாக சேர்ந்து படம் பார்க்க வந்தது அனைவரையும் நெகிழ்ச்சியடைய வைத்தது. சென்னையில் உள்ள முக்கிய திரையரங்குகள் அனைத்திலும் இன்று வலிமை படம் வெளியாகியுள்ளது. வலிமை படம் ரிலீசானதை முன்னிட்டு திரையரங்குகளில் ரசிகர்கள் அனைவரும் கட்- அவுட்கள் வைத்தும், ஆட்டம் ஆடியும், பாட்டு பாடியும் உற்சாகமாக கொண்டாடி வருகின்றனர்.

இந்த நிலையில், சென்னையில் உள்ள பிரபல திரையரங்கு ஒன்றிலும் வலிமை படம் வெளியானது. அங்கு அஜித் ரசிகர்கள் ஆயிரக்கணக்கானோர் திரளாக கூடியிருந்தனர். அவர்களில் நடிகர் விஜய் ரசிகர்கள் பலரும் வந்திருந்தனர். அவர்கள் தங்களது நண்பன் தீவிர அஜித் ரசிகர் என்றும், வலிமை படத்திற்காக நீண்ட நாட்கள் காத்திருந்தான் என்றும், ஆனால், சமீபத்தில் தங்களது நண்பன் உயிரிழந்ததால் அவரது ஆசையை நிறைவேற்றுவதற்காக விஜய் ரசிகர்கள் அனைவரும் ஒன்று சேர்ந்து வலிமை படத்தை பார்க்க வந்துள்ளோம் என்றனர். மேலும், அந்த நண்பரின் புகைப்படம் பொறித்து வலிமை படத்தை பாராட்டி கட்- அவுட்டும் வைத்துள்ளனர்.  



அஜித்தின் தீவிர ரசிகரான தங்களது நண்பரின் கடைசி ஆசையை நிறைவேற்றுவதற்காக விஜய் ரசிகர்கள் திரளாக வந்து வலிமை படத்தை முதல்நாள் முதல் காட்சியை காண வந்தது அங்கிருந்த அனைவரையும் நெகிழ்ச்சியடைய வைத்தது.

மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்

ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்

பேஸ்புக் பக்கத்தில் தொடர

ட்விட்டர் பக்கத்தில் தொடர

யூடிட்பில் வீடியோக்களை காண

Continues below advertisement
Sponsored Links by Taboola