தான் நடித்த குஷி படம் எதிர்பார்த்ததை விட மிகப்பெரிய வெற்றியைப் பெற்றுள்ளதால் நடிகர் விஜய் தேவரகொண்டா சூப்பரான அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளார். 


காதலர்களை கவர்ந்த குஷி படம் 


இயக்குனர் ஷிவா நிர்வாணா இயக்கத்தில் நடிகர் விஜய் தேவரகொண்டா, நடிகை சமந்தா ஆகியோர் நடிப்பில் உருவான படம் ‘குஷி’. இந்த படம் கடந்த செப்டம்பர் 1 ஆம் தேதி வெளியான இப்படம் ரசிகர்களிடம் மிகப்பெரிய அளவில் வரவேற்பை பெற்றது. குறிப்பாக படத்தில் திகட்ட திகட்ட காதல் காட்சிகள் இடம் பெற்றிருந்ததால் இளம் வயதினர் அளவுக்கதிகமாக குஷி படத்துக்கு வருகை தருவதாக தியேட்டர் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. 






படம் பார்த்த பலரும் குஷி குறித்து பாசிட்டிவ் விமர்சனங்களை முன்வைத்து வருவதால் வசூலும் எகிறியுள்ளது. மைத்ரி மூவி மேக்கர்ஸ் தயாரித்த இந்த படம் முதல் 3 நாட்களில் மட்டும்  ரூ. 70 கோடிக்கும் மேல் உலகளவில் வசூல் செய்து பாக்ஸ் ஆபிஸில் சாதனை படைத்ததாக தகவல் வெளியானது. தொடர்ந்து கண்டிப்பாக குஷி படம் ரூ.100 கோடிக்கும் மேல் வசூலிக்கலாம் எனவும் எதிர்பார்க்கப்படுகிறது. கடந்த சில படங்களின் தோல்வியால் அப்செட்டில் இருந்த விஜய் தேவரகொண்டா மற்றும் சமந்தாவுக்கு குஷி படம் கம்பேக் படமாக அமைந்துள்ளது. 


முன்னதாக இந்த படத்தின் ப்ரோமோஷனுக்காக வித்தியாசமாக சமந்தாவும், விஜய் தேவரகொண்டாவும் டான்ஸ் ஒன்றை நிகழ்த்தினர். பாடல்களும், ட்ரெய்லரும் ரசிகர்களை கவர்ந்த நிலையில் படமும் எதிர்பார்ப்பை பூர்த்தி செய்துள்ளது. 


விஜய் தேவரகொண்டாவின் அதிரடி அறிவிப்பு 


இந்நிலையில் விசாகப்பட்டினத்தில் குஷி படத்தின் வெற்றி கொண்டாட்டம் தொடர்பான நிகழ்ச்சி நடைபெற்றது. இதில் பங்கேற்ற விஜய் தேவரகொண்டா, அதிரடியான அறிவிப்பு ஒன்றை வெளியிட்டார். அதன்படி, ‘தனது சம்பளத்தில் இருந்து 1 கோடியை 100 ஏழை குடும்பங்களுக்கு தலா ரூ.1 லட்சமாக பிரித்து வழங்குவதாக தெரிவித்தார். இந்த குடும்பங்களின் பட்டியல் இன்று வெளியிடப்படும் எனவும் கூறினார். 


தொடர்ந்து பேசிய விஜய் தேவரகொண்டா, ‘நீங்க சந்தோஷமா இருப்பதால் நானும் மகிழ்ச்சியாக இருக்கிறேன். நான் எதையாவது யோசிச்சுக்கிட்டே இருக்கேன். அதை சரியாக செய்ய முடியுமா? என தெரியவில்லை.  ஆனால், நான் செய்யாவிட்டால் உறக்கமின்றி இருப்பேன்.  அதாவது எனது 'குஷி' படத்தின் சம்பளத்தில் இருந்து 100 குடும்பங்களுக்கு ஒரு கோடி ரூபாயை பிரித்து வழங்குவேன். பொருளாதார தேவையுள்ள 100 குடும்பங்களைத் தேர்ந்தெடுத்து, அடுத்த 10 நாட்களில் தலா ரூ. 1 லட்சம் காசோலையாக வழங்குவேன்.


எனது வெற்றி, மகிழ்ச்சி, சம்பளம் என அனைத்தும் உங்கள் அனைவருடனும் பகிர்ந்து கொள்ளப்பட வேண்டும். மேலும் இன்று  எனது சமூக ஊடகப் பக்கத்தில் ஒரு படிவத்தைப் பகிர்கிறேன். இந்த படிவத்திற்கு 'மகிழ்ச்சி பரவட்டும்' அல்லது 'தேவேரா குடும்பம்' என்று பெயரிட்டு இருக்கும். இந்த பணம் மக்கள் தங்கள் வாடகை அல்லது கட்டணம் என எதற்காகவாது உதவினால் நான் மகிழ்ச்சியடைவேன். இந்த வெற்றியை நான் உண்மையிலேயே அனுபவிக்க முடியும்” என தெரிவித்துள்ளார். 




மேலும் படிக்க: திருக்குறளை கொண்டாடுகிறார்கள்; அதை பேசிய உதயநிதியை எதிர்ப்பது ஏன்? - சனாதனம் குறித்து வைரமுத்து